Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
சனி வக்ர நிவர்த்தி அடைவதால் நவம்பரில் இந்த ராசிகளுக்கு ஏழரை சனி, அஷ்டம, அர்த்தாஷ்டம சனியின் தாக்கம் குறையும்..
Saturn Direct In Aquarius 2024: வேத ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதிமான் ஆவார். இதனால் தான் சனி என்றாலே அனைவருக்கும் ஒருவித பயம் எழுகிறது. ஏனெனில் தெரிந்தோ, தெரியாமலோ சிறு தவறு செய்தாலும், அதற்கான பலனை நிச்சயம் அனுபவிக்க வைப்பார். இப்படிப்பட்ட சனி கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர்.
தற்போது சனி தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் நுழைந்ததால், ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் அர்த்தாஷ்டம சனியின் தாக்கம் சில ராசிகளுக்கு தொடங்கியிருக்கும். அதுவும் சனி தற்போது கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். வக்ர நிலையில் சனி இருப்பதால், ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்பட்ட ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பல வேதனைகளை சந்தித்திருப்பார்கள்.

ஆனால் இந்த வேதனைகள் அனைத்தும் நவம்பர் 15-க்கு பின் முடிவுக்கு வரப் போகிறது. ஏனெனில், நவம்பரில் சனி வக்ர நிவர்த்தி அடைந்து, நேர்கதியில் பயணிக்கவுள்ளார். இதனால் கஷ்டங்கள் நீங்கி, அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகிறது. இப்போது சனி வக்ர நிவர்த்தி அடைவதால் ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்பட்ட ராசிக்காரர்கள் எப்படிப்பட்ட நல்ல பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
அஷ்டம சனி மற்றும் அர்த்தாஷ்டம சனி
ஜோதிடத்தின் படி, சனி பகவான் கும்ப ராசியில் பயணிப்பதால், கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சனி சென்று அஷ்டம சனியும், விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சனி சென்று அர்த்தாஷ்டம சனியும் தொடங்கியது. அதுவும் சனி வக்ர நிலையில் இருந்ததால், இதுவரை இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள். பல முக்கிய வேலைகளில் தடைகள் ஏற்பட்டிருக்கும். இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்திருப்பார்கள்.
ஆனால் நவம்பரில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால், இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
ஏழரை சனி
சனி பகவான் கும்ப ராசியில் பயணிப்பதால், மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்கியது. மேலும் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் இரண்டாவது கட்டமும், மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் 3 ஆவது கட்டமும் தொடங்கியது. அதுவும் சனி வக்ர நிலையில் இருப்பதால், இந்த 3 ராசிக்காரர்களும் தங்கள் வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்திருப்பார்கள். மன அமைதியின்றி சிரமப்பட்டிருப்பார்கள் மற்றும் உறவுகளில் பல பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள்.
ஆனால் நவம்பர் மாதத்தில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால், இந்த 3 ராசிக்காரர்களுக்கு மன அமைதி கிடைக்கும். உறவுகளில் இருந்த பிரச்சனைகள் தீரும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வியாபாரிகளுக்கு முன்பை விட வியாபாரம் சிறப்பாக இருக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்தித்து வந்தால், அது சற்று குறையும். மொத்தத்தில் நவம்பர் முதல் வாழ்க்கை சிறப்பாகவும், செழிப்பாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications