Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க
சனிபகவான் உருவாக்கும் சஷ ராஜயோகத்தால் 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் செல்வமும், புகழும் தேடி வரப்போகுதாம்...!
கிரகங்களில் முக்கியமானவரும் கர்மவினை அளிப்பவருமான சனிபகவான், மூலத்ரிகோண ராசியில் வலுவாக இருக்கிறார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, சனியின் ராசி மாற்றம் மார்ச் 2025 இல் நடக்க இருக்கிறது. தற்போது கும்ப ராசியில் வலிமையாக நின்று சுப பலன்களை அளித்து வரும் சனிபகவான், சஷ ராஜயோகமான அபூர்வ ராஜயோகத்தையும் உருவாக்கியுள்ளார்.
சஷ ராஜயோகத்தின் சுப பலன்கள் மார்ச் 2025 வரை தொடரும். அதற்குப்பின் சனிபகவான் மீன ராசிக்கு செல்லவிருக்கிறார். நிதிப் பலன்களைத் தவிர, சஷா ராஜயோகம் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறந்த பலன்களைத் தருகிறது.

சஷ ராஜயோகம்
ஜோதிட சாஸ்திரத்தில் மிக உயர்ந்ததாகக் கருதப்படும் பஞ்ச மகாபுருஷ ராஜயோகங்களில் ஒன்று சஷ ராஜயோகம். ஒருவரின் ஜாதகத்தில் சஷ ராஜயோகம் இருந்தால் அவர்கள் செல்வமும், புகழும் அடைவார்கள். இந்த பதிவில் சஷ ராஜயோகத்தால் அதிர்ஷ்டமடையும் ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷம் ராசியின் 10-ம் வீட்டில் சனி சஞ்சரிக்கிறார். மேஷ ராசிக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை அடைவார்கள். இந்த காலகட்டத்தில் எதிர்பாராத நிதி ஆதாயம், வாகனம் வாங்குதல் மற்றும் வீடு வாங்குதல் போன்ற நன்மைகளைப் பெறலாம். பணியிடத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அதற்கான பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும். வியாபாரிகள் அவர்களின் புதிய யோசனைகளால் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைவார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சஷ ராஜயோகம் மூலம் சனிபகவானின் ஆசீர்வாதத்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். இந்த ராசியின் ஐந்தாம் வீட்டில் சனிபகவான் இருக்கிறார். இதனால் சமூகத்தில் இவர்களின் அங்கீகாரமும் புகழும் உயரும். பணியில் இருபவர்க்ளுக்கு இந்த நேரத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை மாற்றுவதற்கும் இதுவே நல்ல நேரம். மாணவர்கள் தேர்வில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். நீங்கள் நீண்ட காலமாக செல்ல விரும்பிய இடத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் உருவாகும்.
தனுசு
தனுசு ராசிக்கு மூன்றாவது வீட்டில் சனிபகவான் வருகிறார். ஆரம்ப காலத்தில் அவர்கள் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும் ஆனால் பின்னர் வெற்றி அவர்களைத் தேடி வரும். வேலையில் இருந்த தடைகள், பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த தடைகள் நீங்கி இப்போது புதிய உச்சத்திற்கு செல்லலாம். உங்களின் புதிய கண்ணோட்டமும், யோசனைகளும் உங்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும்.
மகரம்
மகர ராசியின் இரண்டாம் வீட்டில் சனி இருக்கிறார். இந்த காலகட்டத்தில், அவர்களின் கடின உழைப்புக்கு ஏற்ற வெகுமதி கிடைக்கும். இது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு அதற்கான சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம். இந்த காலக்கட்டத்தில் செய்ய வேண்டிய பணிகள் அனைத்தும் சரியாக முடிவடையும். திருமண தடைகளை எதிர்கொள்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் அவை முற்றிலும் நீங்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

