Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் அஸ்தமனமாகும் சனி: பிப்ரவரி 27 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
Saturn Combust In Aquarius 2025: வேத ஜோதிடத்தின் படி, நீதிமான் சனி பகவான் தற்போது தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். சனி பகவான் ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் பயணித்து வருவார். இந்த 2 1/2 ஆண்டு காலத்தில் சனி பகவான் தனது நிலையில் பல மாற்றங்களை செய்வார்.
இந்நிலையில் பிப்ரவரி 27 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் அஸ்தனமாகவுள்ளார். கும்ப ராசியில் சனி அஸ்தமனமாகும் போது, இந்த ராசியில் சூரிய பகவானும் பயணித்து வருகிறார். ஜோதிடத்தின் படி சூரியனும், சனியும், தந்தை மகனாக இருந்தாலும், ஒன்றுகொன்று எதிரிகள். எனவே சனியும் சூரியனும் ஒன்றாக பயணிக்கும் காலத்தில் சனி பகவான் அஸ்தமனமாவதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதில் சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக நிதி இழப்பு மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இப்போது கும்ப ராசியில் சனி அஸ்தமனமாவதால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். எந்த வேலை செய்தாலும் அதில் தடையையும், தோல்வியையும் சந்திக்க நேரிடும். மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். நிறைய ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும்.
விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் உறவுகள் முறியும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள். இந்த பிரச்சனைகளால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகளை எதிர்கொள்ள நேரிடும். இக்காலத்தில் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். எங்கும் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் படிப்பு குறித்து நிறைய கவலைப்படுவார்கள். வெளிநாடு செல்ல முயற்சிகளை மேற்கொண்டிருந்தால், அதில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மேலும் இக்காலத்தில் ஆரோக்கியத்திலும் நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள். பணியிடத்தில் வேலையில் பில சிக்கல்களை சந்திப்பதால், மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். மாணவர்கள் படிப்பில் சிரமங்களை சந்திப்பார்கள். காதலித்து வருபவர்களும் பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
