Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சனி மற்றும் புதன் பெயர்ச்சியால் தீபாவளியின் போது இந்த 3 ராசிக்காரர்கள் பல கஷ்டங்களை சந்திக்கப் போறாங்களாம்...!
ஜோதிட சாஸ்திரத்தின்படி, அக்டோபர் மாத இறுதியில் நீதியின் கிரகமான சனியும், புத்திக்கூர்மையின் கிரகமான புதனும் இடமாற்றம் அடைகின்றன. கிரகங்களின் இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்காது, மேலும் அவர்களுக்கு பல அசம்பாவிதங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. நினைத்த காரியங்கள் நடக்காமல் போகலாம் அல்லது வேறுவிதமாக நடக்கலாம். இந்த பல துன்பங்களை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கன்னி
அக்டோபர் கடைசி வாரத்தில் இந்த ராசிக்காரர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தில் பல சண்டைகள் ஏற்படலாம். சக ஊழியர்களால் மோசமான அனுபவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் எவ்வளவு நேர்மையாக இருந்தாலும், திறமையாக வேலை செய்தாலும் உங்களுக்கான அங்கீகாரம் உங்களுக்கு மறுக்கப்படலாம்.
இதனால் உங்களுக்கு மனஅழுத்தமும், நிதிரீதியான பின்னடைவும் ஏற்படலாம். பணம் கைக்கு வந்தாலும் பல தேவைகளுக்கு செலவு செய்ய வேண்டி வரும். வியாபாரிகள் பெரும் பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் குறைவை சந்திக்க நேரிடும். கடந்த காலத்தை விட லாபம் குறைய வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் தேர்வுகளில் தோல்வியை சந்திக்க நேரிடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்தும் பணம் கிடைக்காத சூழ்நிலை ஏற்படலாம். கடன் கொடுப்பவர்கள் உங்கள் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு உங்களை ஏமாற்ற முயற்சி செய்யலாம். உடல்நலத் தேவைகளுக்குக்கூட பணம் போதுமானதாக இல்லாத சூழ்நிலையில் நீங்கள் சிக்கிக் கொள்ளலாம். பணியிடத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம்.
குடும்பத்தில் சிலர் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். வெளிநாடு செல்ல விரும்பியவர்கள் புதுவித பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உறவினர்களிடையே சச்சரவு, மன அமைதி இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே அக்டோபர் கடைசி வாரத்தில் இந்த ராசிக்காரர்கள் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
கும்பம்
இந்த காலகட்டத்தில் வியாபாரிகள் கவனமாக இருக்க வேண்டும். தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் செய்யும் போது கவனமாக இருங்கள். நீங்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம், மேலும் நீங்கள் நம்பியிருப்பவர்கள் உங்களை ஏமாற்றலாம். பெரும்பாலும், சரியான முடிவை எடுக்க முடியாததால், வர்த்தகத்தை இழக்க அதிக வாய்ப்பு உள்ளது.
குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து போதுமான ஆதரவு இல்லாமல் இருப்பது உங்களைத் தொந்தரவு செய்யும். தம்பதியரிடையே பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் வார்த்தைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

