Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
ஜூலையில் நடக்கும் சனி, குரு பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப்போகுது...
Saturn And Jupiter Transit On July 2025: ஜோதிடத்தின் படி, வருகிற ஜூலை மாதம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த மாதத்தில் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் இரண்டு பெரிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதோடு வேறு சில முக்கிய கிரகங்களும் தங்களின் ராசியை மாற்றவுள்ளன.
அதில் நீதிமான் சனி பகவான் மீன ராசியில் வக்ரமாகவுள்ளார். தேவர்களின் குருவான குரு பகவான் மிதுன ராசியில் உதயமாகவுள்ளார். மேலும் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் கடக ராசிக்கும், சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகியோரும் ராசியை மாற்றவுள்ளனர். இப்படி ஜூலை மாதத்தில் 6 கிரகங்கள் தங்களின் நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

குறிப்பாக சில ராசிக்காரர்கள் சனி மற்றும் குருவின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால், பெருமளவில் அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். அதுவும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் நிதி நிலையில் நல்ல உயர்வையும் காணவுள்ளனர். இப்போது ஜூலை மாதத்தில் நடக்கும் சனி, குரு பெயர்ச்சிகளால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதமானது சிறப்பாக இருக்கும். சமூகத்தில் புகழும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய வேலைகளை தொடங்கினால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் யோசனைகள் பாராட்டப்படும். தொழில் செய்து வந்தால், நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தில் சனி மற்றும் குருவின் நிலையில் ஏற்படும் மாற்றங்களால் ஆளுமையில் நல்ல முன்னேற்றம் தெரியும். பணியிடத்தில் செயல்திறன் மேம்படும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும். மாணவர்களுக்கு ஜூலை மாதம் மிகவும் சிறப்பான மாதமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதமானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஏனெனில் குரு பகவான் 10 ஆவது வீட்டில் உதயமாகவுள்ளார், சனி பகவான் 7 ஆவது வீட்டில் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். சமூகத்தில் புகழ் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டைப் பெறும். ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட்டு கொண்டிருந்தால், இம்மாதத்தில் அதிலிருந்து விடுபடுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
