Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
2025-ல் நடக்கும் சனி குரு பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு.. உங்க ராசி இதுல இருக்கா?
Saturn And Jupiter Transit On 2025: 2024 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். இன்னும் 1 மாதத்தில் 2025 ஆம் ஆண்டிற்குள் நுழைந்துவிடுவோம். வருகிற 2025 ஆம் ஆண்டில் பல முக்கியமான கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. குறிப்பாக நீதிமான் சனி பகவான் மற்றும் தேவகுருவாக குரு பகவானின் நிலையில் மாற்றங்கள் ஏற்படவிருக்கின்றன.
அதுவும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் இருந்து குரு பகவானின் ராசியான மீன ராசியில் நுழையவுள்ளார். அதே சமயம், குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார்.

இப்படி இவ்விரு கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். முக்கியமாக சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் நல்ல நிதி ஆதாயங்களையும், தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
2025 ஆம் ஆண்டில் நடக்கும் சனி மற்றும் குரு பெயர்ச்சியால், மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. முக்கியமாக இந்த சனி பெயர்ச்சியால் ஏழரை சனியில் இருந்து மகர ராசிக்காரர்கள் விடுபடுகிறார்கள். இதனால் இதுவரை சந்தித்து வந்த மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். இலக்குகளை எளிதில் அடைவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வாகனம், வீடு வாங்கும் யோகம் உண்டு.
விருச்சிகம்
2025 ஆம் ஆண்டில் நடக்கும் சனி மற்றும் குரு பெயர்ச்சியால், விருச்சிக ராசிக்காரர்களுக்கு அடுத்த ஆண்டு மிகவும் அற்புதமாக இருக்கும். சனியின் தாக்கத்தினால் சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பணிபுரிபவர்கள் நீண்ட காலமாக பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருந்தால், இந்த ஆண்டில் அது கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் இந்த ஆண்டில் நிறைவேறும். நன்கு யோசித்து எடுத்த முயற்சிகள் நல்ல வெற்றியை அடையும்.
மிதுனம்
2025 ஆம் ஆண்டில் நடக்கும் சனி மற்றும் குரு பெயர்ச்சியால், மிதுன ராசிக்காரர்களுக்கு அடுத்த ஆண்டு சாதகமாக இருக்கும். முக்கியமாக குரு பகவான் முதல் வீட்டிற்கு வருகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். வணிகத்தை விரிவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
