Latest Updates
-
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
சனி வக்ர நிவர்த்தி அடைவதால் நவம்பர் முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோக காலமா இருக்கப்போகுது...
Sani Vakra Nivarthi In November 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தும். அதில் ராசியை மாற்றுவது, நட்சத்திரத்தை மாற்றுவது, வக்ரமாவது, வக்ர நிவர்த்தி அடைவது, அஸ்தமனமாவது, உதயமாவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இப்படி கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் நீதிமான் சனி பகவான் தற்போது தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். சனி பகவான் வக்ர நிலையில் இருப்பதால், சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை, சவால்களை சந்தித்திருப்பார்கள். ஆனால் நவம்பர் மாதத்தில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார்.

இப்படி சனி வக்ர நிவர்த்தி அடைவதால், இதுவரை பிரச்சனைகளை சந்தித்து வந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறவுள்ளார்கள். இப்போது சனி வக்ர நிவர்த்தி அடைவதால் நவம்பர் முதல் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீடடில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படவுள்ளது. முதலீடுகளை செய்தால் இரட்டிப்பு லாபத்தைப் பெறலாம். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு தொழில் செழிக்கும். புதிய மூலங்களில் இருந்து பணத்தை சம்பாதிப்பீர்பள். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். ஆளுமையும் மேம்படும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். நிலம், வீடு, பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழிலதிபர்கள் நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணத்தைப் பெறுவார்கள். உங்களின் நிதி நிலை மேம்படும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவார்கள். அரசின் முழு ஆதரவு கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தால், நல்ல செய்தியைப் பெறலாம். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறத் தொடங்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
