Latest Updates
-
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
சனி வக்ர நிவர்த்தி அடைவதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கப் போகுது...
Sani Vakra Nivarthi 2024 After Diwali: ஜோதிடத்தில் நீதியின் கடவுளாக கருதப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். தற்போது சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
அதுவும் இந்த ராசியில் சனி பகவான் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்த கும்ப ராசியில் சனி பகவான் மார்ச் 2025 வரை இருப்பார். சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருக்கும் காலத்தில், அவ்வப்போது ராசியை மாற்றிக் கொண்டே இருப்பார்.

தற்போது கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணித்து வரும் சனி பகவான், தீபாவளிக்கு பின், அதாவது நவம்பர் 15 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார். சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தியானது அதிர்ஷ்டத்தைத் தரப் போகிறது. இப்போது சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால் தீபாவளிக்கு பின் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவால் ஒவ்வொரு துறையிலும் வெற்றி கிடைக்கும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் அருமையாக இருக்கும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் உங்களின் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். வெளிநாட்டில் படிக்க விரும்பினால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பல துறைகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரத்தை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலில் இருந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது வியாபாரிகளுக்கு தீபாவளிக்கு பின் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகள் குவியும்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இதுவரை பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மேலும் நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சனி பகவானின் அருளால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களின் வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications