Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது... உங்க ராசி என்ன?
Sani Peyarchi 2025: ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கும் நீதிமானாக கருதப்படுகிறார். இந்த சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை பயணிப்பார். கிரகங்களிலேயே ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிப்பவர் என்றால் அது சனி பகவான் தான்.
இந்த சனி பகவான் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். தற்போது சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் 2025 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி வரை இருந்து, பின் குரு பகவானின் ராசியான மீன ராசிக்குள் நுழையவுள்ளார்.

மீன ராசியில் சனி பகவான் நுழையும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். முக்கியமாக இதுவரை கஷ்டங்களை சந்தித்து வந்தவர்களின் வாழ்க்கை பிரகாசிக்கப் போகிறது. இப்போது 2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
2025 ஆம் ஆண்டில் நடக்கும் சனி பெயர்ச்சியின் போது மகர ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சனி செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியம் அதிகரிக்கும். எதிரிகளை வெற்றி பெறுவீர்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். பேச்சால் பல காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மேலும் உங்கள் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். வியாபாரிகளுக்கு தொழில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் 2025-ல் இருந்து நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
துலாம்
2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் துலாம் ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வருமானம் அதிகரிக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியம் மேம்படும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிதாக திருமணமானவர்கள் குழந்தை பாக்கியத்தைப் பெறுவார்கள்.
மிதுனம்
2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நீண்ட நாட்களாக பதவி உயர்வு எதுவும் கிடைக்காமல் இருந்தால், 2025-ல் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. முக்கியமாக நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications