Latest Updates
-
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு
2026-ல் உருவாகும் பல அரிய ராஜயோகங்கள்: இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட மழையில் நனையப்போறாங்க...
Rajyoga In 2026: 2026 ஆம் ஆண்டில் நுழைய இன்னும் சில நாட்களே உள்ளன. ஜோதிடத்தின் படி, வருகிற 2026 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த ஆண்டில் பல கிரகங்கள் ராசிகளை மாற்றவுள்ளன. அதே வேளையில் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தோ அல்லது அம்சங்களின் மூலமோ பல சுப மற்றும் ராஜயோகங்களை உருவாக்கவுள்ளன.
அதில் ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவானும், சந்திரனும் சேர்ந்து கஜகேசரி ராஜயோகத்தையும், சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகத்தையும் உருவாக்கவுள்ளன. இது மட்டுமின்றி, சுக்கிரனால் மாளவ்ய ராஜயோகமும், புதன் மற்றும் சூரியனால் புதாதித்ய ராஜயோகமும், செவ்வாய் மற்றும் சூரியன் மங்கள ஆதித்ய ராஜயோகங்களும் உருவாகவுள்ளன.

இப்படி 2026 ஆம் ஆண்டில் உருவாகும் பல ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரிந்தாலும், சில ராசிக்காரர்கள் மிகவும் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். குறிப்பாக தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தையும் லாபத்தையும் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இப்போது 2026 ஆம் ஆண்டில் உருவாகும் அரிய ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் உருவாகும் கஜகேசரி மற்றும் சுக்ராதித்ய ராஜயோகம் மிகவும் சிறப்பான பலன்களை வழங்கும். குறிப்பாக எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வீட்டு வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பேச்சாலும், தோற்றத்தாலும் மற்றவர்களை அதிகம் ஈர்ப்பீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டின் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால், தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். முடிவெடுக்கும் திறன்கள் மேம்படும். புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
கும்பம்
2026 ஆம் ஆண்டின் உருவாகும் கஜகேசரி மற்றும் சுக்ராதித்ய ராஜயோகங்களால் கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இந்த ஆண்டில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications