Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
18 மாதத்துக்கு பின் இணையப்போகும் ராகு-சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையா மாற்றப்போகுதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் நிழல் கிரகமான ராகு பொதுவாக அசுபமான கிரகமாகக் கருதப்படுகிறார். ஏனெனில் ராகு மக்களுக்கு எதிர்மறை பலன்களைக் கொடுப்பவராக அறியப்படுகிறார். ஆனால் ஒருவரின் ஜாதகத்தில் சரியான இடத்தில் அமர்ந்தால் ராகு அபரிமிதமான அதிர்ஷ்டத்தைக் கொடுப்பார். அதேசமயம் ராகு மற்ற கிரகங்களுடன் இணையும் போதும் நேர்மறையான பலன்களை அளிப்பார்.
2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி, ராகுவும்-சுக்கிரனும் கும்ப ராசியில் இணைகின்றனர். சுக்கிரன் பிப்ரவரி 6 ஆம் தேதி கும்ப ராசிக்குள் நுழைகிறார், ராகு ஏற்கனவே அந்த ராசியில் இருக்கிறார். இந்த இரண்டு கிரகங்களும் நட்பு கிரகங்களாக இருப்பதால், இந்த கிரகங்களின் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு மகத்தான நன்மைகளை அளிக்கக்கூடும். இது அவர்களின் தனிப்பட்ட வாழக்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலுமே நேர்மறையான பலன்களை ஏற்படுத்தும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
ராகுவும் சுக்கிரனும் மேஷ ராசியின் பதினொன்றாம் வீட்டில் இணைகிறார்கள். இந்த சேர்க்கை மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில்ரீதியான நன்மைகளை அளிக்கப்போகிறது. அவர்கள் பதவி உயர்வுக்காகக் காத்திருந்தால், இப்போது அவர்களின் ஆசை நிறைவேறும். அதேபோல இடமாற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கும் இப்போது நினைத்தது நடக்கும். இந்த இணைப்பால் வருமானம் சீராக உயருவதற்கு வாய்ப்புள்ளது, அதே நேரத்தில் வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும்.
காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திருக்கும், மேலும் அவர்கள் வாழ்க்கைத் துணையுடன் தரமான நேரத்தை செலவிட முடியும். அவர்களின் கடின உழைப்புக்கான பலன்கள் முழுமையாக கிடைக்கும். வெவ்வேறு முதலீடுகளிலிருந்து வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன, இதனால் பொருளாதார நிலை கணிசமாக உயரும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் கர்ம ஸ்தானத்தில், அவர்களின் ராசி அதிபதியான சுக்கிரனும், ராகுவும் இணைகிறார்கள். இந்த சேர்க்கை அவர்களுக்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரும். இது அனைத்து கவலைகளும் பிரச்சினைகளும் மறைந்து போகும் நேரமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் அனுபவித்து வந்த சிக்கல்கள் குறையும். மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த வாழ்க்கை வாழ கஜகேசரி ராஜயோகம் உதவும்.
இதுவரை செய்ய முடியாது என்று சாதித்த பல விஷயங்களை அவர்களால் சாதிக்க முடியும். அவர்கள் மனதில் இருந்து வந்த கவலைகள் முடிவுக்கு வரும். மாணவர்கள் கல்வியில் பெரிய சாதனைகளைப் செய்ய முடியும். உங்கள் வேலையில் ஸ்திரத்தன்மையை அடைவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கும்.
தனுசு
சுக்கிரனும் ராகுவும் தனுசு ராசியின் தைரியம் மற்றும் வீரத்தைக் குறிக்கும் மூன்றாம் வீட்டில் இணைந்து சஞ்சரிக்கப் போகிறார்கள். இந்த கிரக சேர்க்கை அவர்களின் படைப்பாற்றல் மற்றும் திறன்களை மேம்படுத்தும். இது அவர்களின் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்தை வழங்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் பொறுப்புணர்வு அதிகரிக்கும், மேலும் அவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். நிலம் அல்லது சொத்து பற்றிய கடந்த காலத்தில் தீர்க்கப்படாத அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும்.
அவர்களின் கடின உழைப்புக்கான பலன்கள் இப்போது முழுமையாக கிடைக்கும் மற்றும் பணியிடத்தில் அவர்கள் சிறந்து விளங்கலாம் மற்றும் வாழ்க்கையில் முன்னேற ஏராளமான வாய்ப்புகளைப் பெறலாம். கடந்த காலத்தில் சந்தித்து வந்த உடல்நல பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

