Latest Updates
-
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
10 ஆண்டுகளுக்கு பின் சொந்த நட்சத்திரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரங்கள பணக்காரர் ஆக்கப்போகுது..
Rahu Transit In Sadayam Nakshatra 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாகும். இவ்விரு கிரகங்களும் ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருக்கும். மேலும் இந்த கிரகங்கள் எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிக்கும்.
தற்போது நிழல் கிரகங்களுள் ஒன்றான ராகு கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராகு நவம்பர் மாதத்தில் தனது சொந்த நட்சத்திரமான சதயம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் ராகு சொந்த நட்சத்திரம் செல்வது சற்று சிறப்பான பலன்களைத் தரும். ஏனெனில் சொந்த நட்சத்திரத்தில் ராகு மிகவும் சக்திவாய்ந்தவராக இருப்பார். அதுவும் ஒருவரை பணக்காரராக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தவராக ராகு இருப்பார்.

இந்த ராகு நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். அதுவும் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும், பணக்காரராகும் வாய்ப்பையும் பெறுவார்கள். இப்போது 10 ஆண்டுகளுக்கு பின் சொந்த நட்சத்திரத்திற்கு செல்லும் ராகுவால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இந்து நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கை முறை மேம்படும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றிகள் குவியும்.
கும்பம்
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். சனியும், ராகுவும் நட்பு கிரகங்கள் என்பதால், இந்த நட்சத்திர பெயர்ச்சியால் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நடத்தையில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். திட்டமிட்ட திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும். ராகுவின் அருளால் பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுனம்
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். படைப்பாற்றலும், தலைமைத்துவ திறன்களும் மேம்படும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வணிகர்கள் புதிய திட்டங்களை தொடங்கினால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள். தந்தையுடனான உறவு வலுவடையும். பரம்பரை சொத்துக்களால் நல்ல பலன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications