Latest Updates
-
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
2025 ராகு பெயர்ச்சியால் மே 18 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு கஷ்டகாலம் தொடங்கபோகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Rahu Transit In Aquarius On 18 May 2025: ஜோதிடத்தில் ராகு ஒரு நிழல் கிரகமாக கருதப்படுகிறது. இந்த ராகுவிற்கு மற்ற கிரகங்களைப் போல் சொந்த ராசி என்று எதுவும் இல்லை. மேலும் ராகு எப்போதும் வக்ர நிலையில் பின்னோக்கி பயணிக்கக்கூடியவர். தற்போது ராகு மீன ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் வருகிற மே 18 ஆம் தேதி ராகு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். இந்த கும்ப ராசியில் ராகு சுமார் 18 மாதங்கள் வரை இருப்பார். இந்த பெயர்ச்சியின் போது ராகு சனியின் ராசிக்குள் நுழைகிறார். சனி பகவானின் ராசிக்கு ராகு செல்வதால் அதன்தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நன்கு தெரியும்.

குறிப்பாக இந்த ராகு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு பலவிதமான கஷ்டங்கள் வரலாம் மற்றும் வாழ்க்கையில் எதிர்பாராத பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இப்போது ராகு கும்ப ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இந்த வீடு வேலை மற்றும் தொழிலுடன் தொடர்புடையது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் முன்னேற்றத்தைக் காண குறுக்குவழிகளை பின்பற்ற முயற்சிக்கலாம். இது பல தவறுகளுக்கு வழிவகுத்து, வேலையில் பிரச்சனைகளை உண்டாக்கலாம். பணியிடத்தில் கொடுக்கப்பட்ட வேலைகளை மற்றவர்களிடம் கொடுத்தால், அது தீங்கை விளைவிக்கும். குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்ளாமல் இருந்தால், அது உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும். பெற்றோரின் ஆரோக்கியம் குறித்த கவலைகள் அதிகரிக்கும். ராகுவின் தாக்கத்தைக் குறைக்க, ராகு பீஜ மந்திரத்தை சொல்ல வேண்டும்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இது மர்மம், நோய் மற்றும் திடீர் நிகழ்வுகளின் வீடாகும். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளால் அதிகம் அவதிப்படக்கூடும். பங்குச் சந்தையில் அல்லது தொழிலில் முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்புக்களை சந்திக்க நேரிடும். மாமியார் மாமனாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் பதற்றம் அதிகரிக்கும். பண பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். ராகுவின் மோசமான விளைவுகளைத் தடுக்க, கடக ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு ருத்ர அபிஷேகம் செய்ய வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இது திருமணத்தின் வீடாகும். இதனால் இந்த ராசிக்காரர்கள் திருமண உறவுகளில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மூன்றாம் நபரின் குறுக்கீடு உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும். வாழ்க்கைத் துணையுடன் நேர்மையாக பேசுங்கள். ஒழுக்கக்கேடான செயல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் ராகுவின் விளைவுகளைக் குறைக்க சனிக்கிழமைகளில் கருப்பு எள்ளை தானம் செய்ய வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இது குடும்பம், தாய், வீடு ஆகியவற்றின் வீடாகும். இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திப்பார்கள். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும், புரிதலும் இல்லாமல் இருக்கும். வேலை காரணமாக வீட்டை விட்டு விலகி இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இதயம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ராகுவின் தாக்கத்தைக் குறைக்க, இந்த ராசிக்காரர்கள் கருப்பு நாய்க்கு உணவளிக்க வேண்டும்.
மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திடீர் செலவுகள் அதிகரிக்கும். இதன் மூலம் பட்ஜெட் பாதிக்கப்படும். அலுவலக சூழல் மன அழுத்தம் நிறைந்ததாக, மன அமைதியைக் கெடுக்கும் வகையில் இருக்கும். ராகுவின் அசுப விளைவுகளைத் தவிர்க்க, சனிக்கிழமைகளில் ராகுவை வழிபாடு செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications