Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்!
18 ஆண்டுகளுக்கு பின் கும்பம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்..
Rahu Transit In Aquarius 2025: ஜோதிடத்தில் ராகு ஒரு நிழல் கிரகமாக கருதப்படுகிறது. இந்த ராகு ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் வரை இருப்பார். இதனால் சனி பகவானைப் போன்றே ராகுவின் தாக்கமும் ஒருவரது வாழ்க்கையில் நீண்ட காலமாகவும், ஆழமாகவும் இருக்கும். இந்த ராகு தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டின் மே மாதத்தில் ராகு மீன ராசியில் இருந்து வக்ர நிலையில் கும்ப ராசிக்கு செல்லவுள்ளார். இந்த கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். சனி பகவானின் ராசிக்கு ராகு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும்.

குறிப்பாக தொழில் ரீதியாக எதிர்பாராத சில நல்ல மாற்றங்களைக் காணவுள்ளனர். இப்போது 18 ஆண்டுகளுக்கு பின் கும்பம் செல்லும் ராகுவால் தொழில் ரீதியாக அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டிற்கு ராகு செல்லவுள்ளார் இதனால் இந்த ராசிக்காரர்களின் அறிவாற்றலும், நினைவுத்திறனும் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திருமண வாழ்க்கையும் காதல் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் உங்கள் துணைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். இதனால் உங்களின் பிணைப்பு இன்னும் அதிகரிக்கும். பங்குச் சந்தை, லாட்டரி மூலம் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. முக்கியமாக வாழ்க்கையில் நீண்ட காலமாக சந்தித்து வந்த கஷ்டங்கள் குறையும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு ராகு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வெளிநாடு மூலம் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் திட்டங்கள் சிறப்பாக வெற்றி பெறும். இருப்பினும் பணிபுரிபவர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. எந்த விஷயத்தையும் உங்கள் துணையுடன் தெளிவாக விளக்கி கூறுங்கள். இதனால் தம்பதிகளிடையே எந்த தவறான புரிதலும் ஏற்படாது. தொழில் ரீதியாக இந்த ராகு பெயர்ச்சியால் வேலையில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டிற்கு ராகு செல்லவுள்ளார். இதனால் நீண்ட காலமாக வாழ்க்கையில் சந்தித்து வரும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினருடன் இருந்த தகராறுகள் முடிவுக்கு வரும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள் மற்றும் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். பணத்தை முதலீடு செய்யும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதை முயற்சிக்கலாம். இதன் மூலம் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications