Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
2026-ல் ராகுவின் ஆட்டத்தால் இந்த 3 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கும்..
Rahu Transit 2026: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2026 ஆம் ஆண்டில் நுழைய இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்த புத்தாண்டில் சனி பகவானைத் தவிர மற்ற அனைத்து கிரகங்களும் ராசியை மாற்றவுள்ளன. குறிப்பாக நிழல் கிரகமாக கருதப்படும் ராகு 2026 ஆம் ஆண்டில் ராசியை மாற்றவுள்ளார்.
ஜோதிடத்தில் ராகு நிச்சயமற்ற தன்மை, குழப்பம், தாமதங்கள் மற்றும் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தும் கிரகமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட ராகு எப்போதும் வக்ர நிலையில் தான் பயணிப்பார். மேலும் இவர் ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். சனி பகவானுக்கு அடுத்தப்படியாக ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கக்கூடியவர் ராகு. எனவே ராகுவின் ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் ராகு 2 முறை பெயர்ச்சி அடையவுள்ளார். அதில் ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் பயணித்து வரும் ராகு, 2026 ஆகஸ்ட் மாதத்தில் அவிட்டம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். அதன் பின் 2026 டிசம்பர் 05 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து வெளியேறி மகர ராசிக்குள் நுழையவுள்ளார்.
இப்படி ராகுவின் நிலையில் ஏற்படும் மாற்றங்களால் 3 ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கவுள்ளனர். இப்போது 2026-ல் நடக்கும் ராகு பெயர்ச்சியால் பிரச்சனைகளை சந்திக்கும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
2026 ஆம் ஆண்டில் நடக்கும் ராகு பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பதட்டங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். இலக்குகளை அடைந்தாக வேண்டிய கட்டாயத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும்.
நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். ஆபத்தான முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பண பிரச்சனையை சந்திக்க நேரிடும். மற்றவர்களுடன் பேசும் போது பொறுமை மற்றும் பணிவைக் கடைப்பிடிக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அல்லது வேலை தேடுபவர்கள் நல்ல வேலையை எதிர்பார்த்தால், இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருக்க வேண்டும். எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், பல முறை யோசித்து ஆராய்ந்த பின்னரே எடுக்க வேண்டும்.
சிம்மம்
2026-ல் நடக்கும் ராகு பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் பல சவால்களை சந்திப்பார்கள். பணியிடத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டியிருக்கும். வணிகர்கள் லேசான நிதி இழப்பை சந்திக்க நேரிடும்.
ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திப்பீர்கள். உறவுகளில் அதிகரித்து வரும் கருத்து வேறுபாடுகள் மன அமைதியையும் பாதிக்கும். வீட்டில் பிரச்சனைகள் அடிக்கடி எழும். அதை கவனமாக கையாள வேண்டும். ஒரு நல்ல செய்தி பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
கன்னி
2026-ல் நடக்கும் ராகு பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்வாக இருக்கலாம். அலுவலகத்தில் அதிகப்படியான பணிச்சுமையால் உடல் மற்றும் மனச்சோர்வு அதிகரிக்கலாம். நீண்ட கால நண்பர்களிடம் இருந்து பிரிவை சந்திக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
எந்த ஒரு வேலையையும் தள்ளிப் போடுவது சூழ்நிலைகளை மோசமாக்கும். சவால்களை சுமூகமாக எதிர்கொள்ள ஒழுக்கம் முக்கியமாகும். காதல் திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்கள் அல்லது குடும்பத்தினரின் ஒப்புதலைப் பெற விரும்புபவர்கள் கூடுதல் தடைகளையும் எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிடும். உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் மரியாதையுடன் நடந்து கொண்டால், பணியிட பதட்டம் குறையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
