Latest Updates
-
இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா? -
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும் -
ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? -
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்! -
லன்ச்பாக்ஸ்-க்கு தக்காளி சாதத்தை இப்படி செய்யுங்க.. பிரியாணி மாதிரி டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
கருவளையங்கள் உங்களை டல்லா காட்டுதா? அப்ப இந்த மாஸ்க்கை அடிக்கடி போடுங்க..
வரப்போற 2026 ராகு பெயர்ச்சியால் இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான வருடமாக இருக்கப்போகுதாம்... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் மிகவும் முக்கியமானவையாகும். ஒவ்வொரு கிரகத்தின் இயக்கமும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தில் ராகு பொதுவாக நிழல் கிரகமாக கருதப்படுகிறது. இதனால் அனைவரும் பாதகமான விளைவுகளை அனுபவிப்பதாக கூறப்படுகிறது, ஆனால் உண்மையில் ராகு ஒருவரின் ஜாதகத்தில் எந்த இடத்தில் அமர்கிறார் என்பதைப் பொறுத்து மாறுபடும்.
2026-ல் ராகுவின் மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையானதாகவும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையானதாகவும் இருக்கப்போகிறது. 2026 ஆம் ஆண்டு முழுவதும் ராகு கும்ப ராசியில் நீடிக்கப்போகிறார்.

ராகுவின் இந்த நிலை சில ராசிக்காரர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது. ராகுவின் செல்வாக்கு இந்த ராசிக்காரர்களுக்கு தடைகள், குழப்பம் மற்றும் நிலையற்ற தன்மையை வழங்கப்போகிறது. இந்த பதிவில் ராகு பெயர்ச்சியால் 2026-ல் தடைகளை சந்திக்கப் போகும் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் வரும் ஆண்டில் ராகு பெயர்ச்சியால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது வேலையில் சிக்கல்கள், வருமானக் குறைவு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். அவர்கள் நினைத்த விஷயங்கள் எதுவும் இப்போதும் சாதகமாக முடிவடையாது. திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அலுவலகத்தில் அவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும், இல்லையெனில் அது உங்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம், இல்லையெனில் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இந்த ஆண்டு நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் காரணமாக 2026 கடினமாக இருக்கும். அவர்களின் வேலையில் இடையூறுகள் ஏற்படலாம், மன உளைச்சல் மற்றும் தாமதங்கள் ஏற்படலாம். இந்த ராகு சஞ்சாரம் அவர்கள் வாழ்க்கையில் மிகவும் தீங்கு விளைவிக்கும் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. ஆண்டின் பிற்பகுதி மிகவும் மோசமானதாக இருக்கும். குறிப்பாக பெண்கள் தங்கள் அமைதியையும், மகிழ்ச்சியையும் இழப்பார்கள். மேலும் நெருங்கிய ஒருவரால் அவமதிப்பை சந்திக்க நேரிடும்.
தங்கள் உடல்நலத்தைப் பற்றி நினைத்து அடிக்கடி மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். இந்த ஆண்டு அவர்கள் தொழிலில் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். இது அவர்கள் வாழ்க்கையில் நிதி சிக்கல்களை அதிகரிக்கும். இந்த வருடம் மிகவும் கவனமாக இல்லாவிட்டால் இது அவர்கள் வாழ்க்கையின் மோசமான ஆண்டாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ராகு சஞ்சாரத்தால் 2026-ல் பல பின்னடைவுகளை சந்திக்கப் போகிறார்கள், இந்த ஆண்டு முழுவதும் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ராகுவின் செல்வாக்கால் அவர்களின் கண்ணியமும், நற்பெயரும் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படலாம், மேலும் அவர்கள் தங்களின் நற்பெயரைக் காத்துக்கொள்ள கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளலாம், மேலும் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்.
இந்த நேரத்தில், அவர்கள் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை இழக்கும் சூழல் ஏற்படலாம், எனவே அவர்கள் வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும். திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்படலாம், திருமணமாகாதவர்களுக்கு சரியான ஜோடி கிடைப்பது மிகவும் கடினமாக மாறலாம். மாணவர்கள் கல்வியில் சில போராட்டங்களை எதிர்கொள்ளலாம். இந்த ஆண்டு எந்த முதலீடுகளையும் செய்யாமல் இருப்பது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் 2026-ல் ராகுவைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த வருடத்தில் அவர்கள் முதலீடுகள் மற்றும் பணம் தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில அவமானங்களையும், வெறுமையையும் அவர்கள் சந்திக்க நேரிடும். அவர்கள் துணையுடன் சண்டைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன, மேலும் அவர்கள் துணையுடன் சீரான உறவைப் பராமரிக்க வேண்டும்.
தொழில் வாழ்க்கையிலும் அவர்கள் மன அழுத்தத்தை உணரலாம், மேலும் அவர்களின் வணிக கூட்டாளருடன் சில வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் துணையின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிக முக்கியம். மருத்துவமனைக்காக பெரிய தொகையை செலவிடும் நிலை ஏற்படலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
