Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
18 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் ராகு-சூரியன்: பிப்ரவரியில் இந்த 3 ராசிக்கு பெரிய இழப்பு ஏற்படும்.. உஷார்..
Rahu Sun Make Grahan Yog 2026 After 18 Years: ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் ராகு. இந்த ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார் மற்றும் இவர் எப்போதும் பின்னோக்கி வக்ர கதியில் பயணிப்பார். இப்படி ஒரு ராசியில் நீண்ட காலம் இருப்பதால், அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார்.
அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் பிப்ரவரி மாதத்தில் கிரகங்களின் ராஜாவான சூரியனும், நிழல் கிரகமான ராகுவும் கும்ப ராசியில் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர். இப்படி கும்பத்தில் ஒன்றிணையும் சூரியன் ராகுவால் ஒரு அசுப யோகம் உருவாகவுள்ளது. அது தான் கிரகண யோகம்.

இந்த யோகத்தினால் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பலவிதமான சிரமங்களை சந்திப்பார்கள். எந்த வேலையை செய்தாலும், அதில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். நிதி விஷயங்களில் கூடுதல் கவனமாக இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்கக்கூடும். இப்போது பிப்ரவரி மாதத்தில் ஒன்றிணையும் ராகு-சூரியனால் உருவாகும் கிரகண யோகத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் ராகு சூரியனால் கிரகண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதய பிரச்சனை உள்ளவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். சூரியன் இதய பிரச்சனைகளை தூண்டுவதால், உடல் பரிசோதனைகளை தவறாமல் செய்ய வேண்டும். இக்காலத்தில் ஏதாவது ஒரு விஷயத்தால் மன அழுத்தமடையக்கூடும். மேலும் பழைய நோய் ஒன்று தொந்தரவு செய்யக்கூடும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் ராகு சூரியனால் கிரகண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிலும் தோல்விகளை சந்திக்க நேரிடும். நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் சாதகமாக வராது. ரகசிய எதிரிகள் தொந்தரவு செய்யக்கூடும். தொண்டை, மார்பு பகுதிகளில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். இந்த யோகத்தின் மோசமான விளைவுகளை தவிர்க்க சூரியனுக்கு நீரை அர்ப்பணிக்க வேண்டும்.
மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் ராகு சூரியனால் கிரகண யோகம் உருவாகவுள்ளது. இதனால் மீன ராசிக்காரர்களுக்கு மோசமாக இருக்கும். தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். இதன் மூலம் பட்ஜெட் பாதிக்கப்படும். வீண் பழியை சந்திக்க நேரிடும். உங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படலாம். காதலித்து வந்தால், அந்த காதலில் பிரச்சனை முற்றி பிரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏழரை சனி நடந்து கொண்டிருப்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











