Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
18 ஆண்டுகளுக்கு பின் சொந்த நட்சத்திரம் செல்லும் ராகு: டிசம்பரில் இந்த 3 ராசிகளின் கையில் பணம் குவியும்...
Rahu Nakshatra Transit On 02 December 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் ராகு. இந்த ராகு மற்ற கிரகங்களைப் போல் நேர்கதியில் பயணிக்காமல், பின்னோக்கி வக்ர கதியில் தான் பயணிப்பார். மேலும் கிரகங்களில் ராகு மற்றும் கேதுவிற்கு என்று தனி ராசி எதுவும் இல்லை. இப்படிப்பட்ட ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார்.
தற்போது ராகு கும்ப ராசியில் பயணித்து வருகிறார். ராகு என்றாலே கொடூர கிரகமாக பலரும் கருதுகின்றனர். ஆனால் ராகு ஒருவரது ஜாதகத்தில் சிறப்பான நிலையில் இருந்தால், அந்நபர் நல்ல வெற்றியைப் பெறுவதோடு, வளமான மற்றும் செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்வார். 'ராகுவைப் போல் கொடுப்பவரும் இல்லை' என்று கூறுவது போல, மிகப்பெரிய யோகங்களை அள்ளித் தருவார்.

இந்நிலையில் ராகு டிசம்பர் 02 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது ராகு தனது சொந்த நட்சத்திரமான சதயம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை இருப்பார். முக்கியமாக ராகு தனது சொந்த நட்சத்திரத்துக்கு சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் செல்வதால், திடீர் பெரிய மாற்றங்கள், சாதனைகள், விரைவான முன்னேற்றம், எதிர்பாராத நிதி ஆதாயம் போன்றவை கிடைக்கும்.
ராகுவின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரிந்தாலும் 3 ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். இப்போது ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் திடீரென்று புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் மற்றும் பொருள் வசதிகள் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்களும் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆனால் சனி 12 ஆவது வீட்டில் இருப்பதால், மன அழுத்தம், பதட்டம் அதிகரிக்கும். மேலும் ஏழரை சனியின் முதல் கட்டம் நடப்பதால், ஆரோக்கியத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்வது நன்மை பயக்கும்.
கன்னி
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். வாழ்க்கையில் நடந்து வரும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் சாதகமாக வரும். ராகுவின் பார்வை 12 ஆவது வீட்டில் விழுவதால், ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் நிதி பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
குடும்ப உறுப்பினர்கள் யாருக்கேனும் இதுவரை நிறைய மருத்துவ செலவுகளை செய்து வந்தால், இந்த பெயர்ச்சிக்கு பின் அந்த செலவுகள் குறைவதோடு, அவர்களின் ஆரோக்கியமும் மேம்படும். தொழில் ரீதியாக சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். ராகுவின் அருளால் உள்ளுணர்வு மேம்படும். இதனால் நண்பர்கள், எதிரிகளை எளிதில் கண்டறிய முடியும்.
விருச்சிகம்
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும். ராகுவின் அருளால் லட்சியங்களை அடைவீர்கள். ஆனால் அவசரமாக எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். செலவுகளை அதிகம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். பட்ஜெட்டுகளில் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு பிரச்சனையையும் பேசி தீர்க்க வேண்டும். தொழில் ரீதியாக எந்த வேலையை எடுத்தாலும், அதில் வெற்றி காண்பீர்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இதனால் கையில் பணம் அதிகம் குவிந்து, நிதி நிலையில் உயர்வு ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
