ஆகஸ்ட் 10-ல் உருவாகும் கிரகண யோகம்: இந்த 3 ராசிக்காரங்களை வெச்சு செய்யப்போகுது.. உஷார்...

Rahu Moon Make Grahan Yog On 10 August 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

அந்த வகையில் நிழல் கிரகமாக கருதப்படும் ராகு கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் ஆகஸ்ட் 10 ஆம் தேதி கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் கும்ப ராசியில் ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

Rahu Moon Make Grahan Yog On 10 August 2025 These Zodiac Signs Should Be Careful

முக்கியமாக சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் பண விஷயத்தில் மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இப்போது ஆகஸ்ட் 10-ல் உருவாகும் கிரகண யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மீனம்

மீன ராசியின் 12 ஆவது வீட்டில் ராகு சந்திர சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். இதன் மூலம் உங்கள் பட்ஜெட் பாழாகும். அதிக மன அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும். வணிகர்கள் இக்காலத்தில் எந்த ஒரு புதிய ஒப்பந்தங்களையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் இழப்புக்களை சந்திக்க நேரிடும். எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்க வேண்டாம். மேலும் எந்த ஒரு பயணங்களையும் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

துலாம்

துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் ராகு சந்திர சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களை மறைமுக எதிரிகள் தொந்தரவு செய்யலாம். சில முக்கியமான வேலைகள் பாதியில் நிறுத்தப்படலாம். ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும். வாக்குவாதங்களை செய்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் அந்த பணம் கைக்கு திரும்ப வராது. வாழ்க்கைத் துணையுடன் மோதல்களை சந்திக்க நேரிடும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் ராகு சந்திர சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் சளி, காய்ச்சல் தொல்லையால் அவதிப்பட நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். பண விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, August 4, 2025, 22:32 [IST]
Desktop Bottom Promotion