Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
18 ஆண்டுகளுக்கு பின் ஜூலை 13-ல் உருவாகும் கிரகண யோகம்: இந்த 3 ராசிக்காரங்கள வெச்சு செய்யப்போகுது...
Rahu Moon Make Grahan Yog 13 July 2025: ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குகின்றன. அவ்வாறு உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நிழல் கிரகமாக கருதப்படும் ராகு கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்த கும்ப ராசிக்கு சந்திரன் ஜூலை 13 ஆம் தேதி நுழையவுள்ளார். இதனால் கும்ப ராசியில் ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு நன்றாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டியிருக்கும்.

அதில் 3 ராசிக்காரர்கள் கிரகண யோகத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த ராசிக்காரர்களுக்கு பண இழப்பு ஏற்படலாம் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடலாம். மேலும் பணம் சிக்கவும் வாய்ப்புள்ளது. இப்போது கிரகண யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் ஜூலை 13 முதல் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தால் திருமண வாழ்க்கையில் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களுடன் தகராறு ஏற்படலாம். திடீர் செலவுகள் அதிகரித்து, அதன் விளைவாக நிதி நிலைமை மோசமாக பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. சிக்கிய பணம் கைக்கு வராமல் சிரமப்படுத்தும். ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். ஹோட்டல்களில் அதிகம் வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் ஏமாற்றமடையக்கூடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். மனம் அமைதியிழந்து இருக்கும். எந்த வேலையிலும் கவனத்தை செலுத்த முடியாமல் சிரமப்பட நேரிடும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், அதை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் வேலை கிடைக்காமல் அவதிப்பட நேரிடும்.
தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்காது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் குறையும். எதிரிகள் அதிகம் தொந்தரவு செய்வார்கள். முக்கியமான வேலைகள் நின்றுபோகும் வாய்ப்புள்ளது. ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
