Latest Updates
-
தீபாவளியில் உருவாகும் 2 சக்திவாய்ந்த ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
18 மாதங்களுக்கு பின் ராகு மகர ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
அவரைக்காயை எப்பவும் பொரியல் செய்யாம.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
15 பல் பூண்டு இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் பூண்டு பப்புவை செய்யுங்க - சாதத்தில் ஊற்றி சாப்பிட அமிர்தமா இருக்கும -
அடிக்கடி நெஞ்செரிச்சல், அஜீரணமா? வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டும் உள்ளது? வேறு நிறத்தில் டயர் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா? -
வக்ர சுக்கிரன் இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகிறார்.. உங்க ராசி இதுல இருக்கா? -
முருங்கைக்கீரை கோதுமை தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 03, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்கப்போகுதாம் -
சிம்ம ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
ராகுவும்-சந்திரனும் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க அவமானங்களையும், நஷ்டத்தையும் சந்திக்கப் போறாங்களாம்...!
செப்டம்பர் மாதத்தில், பல பெரிய கிரகங்கள் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தில் நிலையை மாற்றுவதன் மூலம், சில நல்ல மற்றும் அசுப சேர்க்கைகளை உருவாக்கப் போகின்றன. ஒவ்வொரு கிரகமும் அதன் தனித்துவமான சக்தியைக் கொண்டுள்ளது, மேலும் ஒரு புதிய ராசி அல்லது வீட்டிற்கு செல்லும் போது அது அனைத்து ராசிக்காரர்களின் தொழில், ஆரோக்கியம், உறவுகள் மற்றும் குடும்ப வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டுவருகிறது. செப்டம்பரில், கும்ப ராசியில் ராகு-சந்திரன் சேர்க்கை கிரகண யோகத்தை உருவாக்கப் போகிறது, இது ஒரு சில ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டமான பலன்களை வழங்கப்போகிறது.
தற்போது ராகு கும்ப ராசியில் இருக்கிறார். சில நாட்களில், சந்திரன் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனால் கும்ப ராசியில் சந்திரனும் ராகுவும் இணைந்து கிரகண யோகத்த்தை உருவாக்குகிறார்கள். இந்த இணைப்பு சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளித்தாலும் சில ராசிக்காரர்களுக்கு மோசமான விளைவுகளை வழங்கப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

துலாம்
கும்ப ராசியில் ராகு-சந்திரன் இணைவது துலாம் ராசிக்காரர்களுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். அவர்களின் கண்ணியமும், நற்பெயரும் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படலாம், மேலும் அவர்கள் தங்கள் மரியாதையை காத்துக்கொள்ள கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளலாம், மேலும் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்.
இந்த நேரத்தில், அவர்கள் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை இழக்கும் சூழல் ஏற்படலாம், எனவே அவர்கள் வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும். திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்படலாம், திருமணமாகாதவர்களுக்கு சரியான ஜோடி கிடைப்பது மிகவும் கடினமாக மாறலாம். மாணவர்கள் கல்வியில் சில போராட்டங்களை எதிர்கொள்ளலாம். இந்த காலகட்டத்தில் எந்த முதலீடுகளையும் செய்யாமல் இருப்பது நல்லது.
சிம்மம்
கும்ப ராசியில் ராகு-சந்திரன் இணைவது சிம்ம ராசிக்கு அசுபமான பலன்களை வழங்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள்முதலீடுகள் மற்றும் பணம் தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில அவமானங்களையும், வெறுமையையும் அவர்கள் சந்திக்க நேரிடும். அவர்கள் துணையுடன் சண்டைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன, மேலும் அவர்கள் துணையுடன் சீரான உறவைப் பராமரிக்க வேண்டும்.
தொழில் வாழ்க்கையிலும் அவர்கள் மன அழுத்தத்தை உணரலாம், மேலும் அவர்களின் வணிக கூட்டாளருடன் சில வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் துணையின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிக முக்கியம். மருத்துவமனைக்காக பெரிய தொகையை செலவிடும் நிலை ஏற்படலாம்.
மீனம்
கும்ப ராசியில் நடக்கும் ராகு-சந்திரன் சேர்க்கை மீன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை வழங்காது. இதனால் அவர்கள் வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் இருக்கும். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், மேலும் வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட கடந்த கால பிரச்சினைகள் மீண்டும் துளிர்விடும். இந்த காலகட்டத்தில் அவர்கள் அதிக பொறுமையை கடைபிடிக்க வேண்டும், மேலும் பல்வேறு விஷயங்களை தெளிவுடன் கையாள வேண்டும்.
இந்த காலகட்டத்தில் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம், இதனால் அவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். வீட்டின் அமைதி பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படலாம். அவர்களின் திட்டங்கள் தோல்வியில் முடிவடைய வாய்ப்புள்ளது, மேலும் குடும்ப உறுப்பினர்களுக்குள் சில வாக்குவாதங்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சில பின்னடைவுகள் ஏற்படலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

