Latest Updates
-
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்..
18 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் நடக்கும் ராகு கேதுநட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசியின் அதிர்ஷ்ட கதவு திறக்கும்
Rahu Ketu Transit On 23 November 2025: வேத ஜோதிடத்தில் ராகு, கேது ஆகிய இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்களாகும். இதில் ராகு மாயை, பொருள் ஆசைகள் மற்றும் திடீர் நிகழ்வுகளுக்கு காரணியாக கருதப்படுகிறார். அதே சமயம் கேது ஆன்மீகம், முக்தி, துறவு, பற்றின்மை ஆகியவற்றின் காரணியாவார். இவ்விரு கிரகங்களும் ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருக்கும். மேலும் நிழல் கிரகங்கள் என்பதால் எப்போதும் பின்னோக்கி தான் பயணிக்கும்.
இப்படிப்பட்ட ராகு, கேது ராசியை மாற்றுவது மட்டுமின்றி, குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றும். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இந்நிலையில் ராகு மற்றும் கேது நவம்பர் 23 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளனர்.

அப்போது ராகு தனது சொந்த நட்சத்திரமான சதயம் நட்சத்திரத்திற்கும், கேது பூரம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திற்கும் செல்லவுன்னர். இப்படி ராகு, கேதுவின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்களினால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாகவும் இருக்கப் போகிறது. இப்போது ராகு கேதுவின் நட்சத்திர மாற்றத்தினால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் ராகு, கேதுவின் நட்சத்திர மாற்றத்தினால் தொழில் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காண்பார்கள். மேலும் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஐடி, ஊடகம் அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுடன் வணிகம் செய்பவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். கேதுவின் அருளால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். குடும்பத்தினருடனான உறவுகள் மேம்படும். முக்கியமாக இக்காலத்தில் மனதில் எதையும் வைத்துக் கொண்டு புலம்பாமல், வெளிப்படையாக பேசினால், நல்ல பலனைப் பெறலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ராகு, கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். வேலையில் மகத்தான வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் ராகு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மகத்தான வெற்றியையும் நிதி ஆதாயங்களையும் பெறுகூர்கள். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்களின் படைப்புத்திறன் அதிகரிக்கும். வருமானத்தில் நல்ல அதிகரிப்பை காணக்கூடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் வேலையில் திருப்தி அடைவார்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும். திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் சிறப்பாக முடியும். சமூகத்தில் உங்களின் பணி பாராட்டப்படும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உறவுகள் இனிமையாக மாறும். ஆயினும் ராகுவின் மாயை சக்தியால் குழப்பம், ஈகோ, நிலையற்ற தன்மை அதிகரிக்கும். முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படும். ஒவ்வொரு செயலையும் கவனமாக செய்ய வேண்டும். முடிவுகளிலும் கவனமாக இருக்க வேண்டும். பொறுமையுடனும், விவேகத்துடனும் நடந்து கொண்டால், நீண்ட கால வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
