Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
ராகு-கேது 2025-ல் பெயர்ச்சி அடைவதால் ராஜயோகம் அடையப்போகும் 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா?
Rahu-Ketu Transit 2025: 2025 ஆம் ஆண்டில் பல முக்கியமான கிரக பெயர்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. நிழல் கிரகங்கள் மற்றும் மாய கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு மற்றும் கேது வேத ஜோதிடத்தில் மற்ற கிரகங்களைப் போலவே முக்கியமானவை. ராகுவும், கேதுவும் அடுத்த வருடம் ராசி மாறுகிறார்கள். இந்த ராசி மாற்றத்தின் பலன்கள் அனைத்து ராசிகளிலும் பிரதிபலிக்கும்.
ராகு மற்றும் கேது பற்றி மக்களிடையே பல தவறான புரிதல்கள் உள்ளன. இவை துன்பம் தரும் கிரகங்கள் என்றும், தொல்லை தரும் கிரகங்கள் என்றும் கருதப்படுகின்றன. ஆனால் ராகுவும், கேதுவும் மற்ற கிரகங்களைப் போல் நன்மை தரும் கிரகங்கள்தான். அதே நேரத்தில் மற்ற கிரகங்களைப் போலல்லாமல் அவை எப்போதும் பின்னோக்கி நகர்கிறது.

தற்போது ராகு மீனத்திலும், கேது கன்னி ராசியிலும் உள்ளனர். 2025ல் ராகு கும்ப ராசிக்கும், கேது சிம்ம ராசிக்கும் மாறுகிறார்கள். 2025 மே மாதம் நடைபெறவுள்ள ராகு கேதுவின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கப் போகின்றன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
ராகு பன்னிரண்டாம் வீட்டில் இருந்து மேஷ ராசியின் பதினொன்றாம் வீட்டிற்கு மாறுகிறார். அதேசமயம் ஆறாமிடத்தில் இருந்து ஐந்தாமிடத்திற்கு கேது செல்கிறார். இது ஒரு சுப ராசி மாற்றமாகும். மே மாதத்திற்குப் பிறகு, இது மற்ற கிரகங்களின் எதிர்மறை விளைவுகளைத் தணிக்கும் கிரகப் பெயர்ச்சியாகும். ராகு சாதகமான அம்சத்தில் இருந்தால் பல நல்ல அனுபவங்களை தரும் கிரகமாகும். இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்கள் பொருளாதாரரீதியாக பல நன்மைகளைப் பெறுவார்கள். எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.
நீண்ட நாட்களாக நீங்கள் செய்ய நினைத்த காரியங்களை நிறைவேற்றவும், உங்கள் இலக்குகளை அடையவும் இது சிறப்பான நேரமாக இருக்கும்.இந்த காலகட்டத்தில் ஆன்மீக எண்ணங்களும், கடவுள் பக்தியும் அதிகரிக்கும். இதனால் குடும்பத்தில் அமைதியும், செழிப்பும் ஏற்படும்.
மிதுனம்
2025-ல் ராகு மிதுன ராசியின் ஒன்பதாம் வீட்டிற்கு வருகிறார், மூன்றாவது வீட்டிற்கு கேது வருகிறார். ராகு-கேது மாற்றங்கள் வரும் ஆண்டில் மிதுன ராசியினருக்கு சாதகமான அனுபவங்களை வழங்கும். இந்த காலகட்டத்தில், மிதுன ராசிக்காரர்கள் அவர்கள் விரும்பியதை அடைய முடியும். அதனால் எதிர்பாராத பலன்கள் உண்டாகும்.
சனிதோஷத்தால் பாதிக்கப்பட்ட மிதுன ராசிக்காரர்களுக்கு அடுத்த ஆண்டு மே மாதம் ராகு கேதுவின் ராசி மாற்றத்தின் மூலம் அனைத்திலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். இது வீடு, வாகனம், நிலம் வாங்குவதற்கு மிகவும் சாதகமான காலமாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் இரண்டாம் வீட்டில் ராகு நுழைகிறார். மகரம் பணம், அறிவு மற்றும் ஒழுக்கத்துடன் தொடர்புடையது. இந்த காலகட்டத்தில் எதிர்பாராத வகையில் பணமும் செல்வமும் வந்து சேரும். பல வழிகளில் பணவரவு கிடைக்கும். சமூகத்தில் அங்கீகாரமும் அந்தஸ்தும் பெறுவார்கள். மற்றவர்கள் அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார்கள்.
வெளியூருக்கு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களின் ஆசைகள் நிறைவேறும். இந்த ராசிக்காரர்கள் அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியடைவார்கள். வணிகத் துறையில் பணிபுரிபவர்களுக்கும், கலைத் துறையில் பணிபுரிபவர்களுக்கும் இது அவர்களின் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும் காலமாக இருக்கும்.
மீனம்
ஏழரை சனியை மீன ராசிக்காரர்கள் கடக்கும் காலம் இது. மீன ராசியின் பன்னிரண்டாம் வீட்டிற்கு ராகு வருகிறார். மீன ராசிக்காரர்கள் இந்த ராசி மாற்றத்தின் மூலம் நிவாரணம் மற்றும் துன்பங்களில் இருந்து விடுபடுவார்கள். அவர்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
குடும்பத்தில் மகிழ்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் மன அமைதி போன்றவை இந்த நேரத்தில் மீன ராசிக்காரர்களை தேடிவரும். உடல்நலக் கோளாறுகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக செல்ல ஆசைப்பட்ட ஊருக்கு பயணம் செய்யலாம். ஊடகம் மற்றும் கலைத்துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்தக் காலம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
