Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
ராகு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் நீங்கி, அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
Rahu Ketu Nakshatra Transit 2025: வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியையும், நட்சத்திரத்தையும் மாற்றி, மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த நவகிரகங்களில் ராக, கேது ஆகியவை நிழல் கிரகங்களாகும்.
இவ்விரு கிரகங்களும் மற்ற கிரகங்களைப் போல் நேர்க்கதியில் பயணிக்காமல், பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கும். இப்படிப்பட்ட ராகு மீன ராசியிலும், கேது கன்னி ராசியிலும் பயணித்து வருகின்றனர். இந்த ராகு மற்றும் கேது மார்ச் 16 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளனர். அப்போது ராகு பூரட்டாதி நட்சத்திரத்திற்கும், கேது உத்திரம் நட்சத்திரத்திற்கும் செல்லவுள்ளனர்.

இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதுவும் இந்த ராசிக்காரர்கள் ராகு, கேதுவின் சிறப்பான ஆசிகளைப் பெற்று, நிதி நிலையில் நல்ல உயர்வை காணப்போகிறார்கள். இப்போது ராகு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
ராகு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் வருமானத்தில் நல்ல உயர்வைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் சிறப்பான செயல்திறனால் பதவி உயர்வையும், சம்பள உயர்வையும் பெற வாய்ப்புள்ளது.
வியாபாரம் செய்பவர்கள் மார்ச் முதல் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பல புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும்.
மேஷம்
ராகு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். சிலர் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம். வணிகர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
பணிபுரிபவர்கள் தங்கள் இலக்குகளை அடைவார்கள். இதன் மூலம் பதவி உயர்வ, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள். புதிய வருமான வழிகள் திறக்கப்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ராகு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது. தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மேலும் முடிக்க முடியாமல் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடைவதோடு, நல்ல நிதி ஆதாயமும் கிடைக்கும்.
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதுவரை ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்தால், ராகு கேது நட்சத்திர பெயர்ச்சிக்கு பின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications