Latest Updates
-
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..
இந்த 4 நட்சத்திரங்களில் பிறந்த குழந்தைகள் ஆள்வதற்காக பிறந்தவர்களாம்... இவங்க எங்க போனாலும் ராஜாதான்...!
ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் பிறந்த ராசி எவ்வளவு முக்கியமோ அதேயளவிற்கு அவர்களின் பிறந்த நட்சத்திரமும் முக்கியமானதாகும். ஏனெனில் சிறப்பான ராசியில் பிறந்திருந்தாலும் நட்சத்திரம் பாதாமானதாக இருந்தால் அவர்களின் எதிர்காலம் அவ்வளவு சிறப்பாக இருக்காது.
ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன, நட்சத்திரம் என்பது 27 கிரகணப் பிரிவுகளில் ஒன்றாகும். அவை ஒவ்வொன்றும் ஒரு பெயரால் அழைக்கப்படுகின்றன. நீங்கள் பிறந்த நேரத்தில் சந்திரன் எங்கிருந்தது என்பது உங்கள் நட்சத்திரத்தை தீர்மானிக்கிறது. ஒவ்வொரு நட்சத்திரமும் அதற்கென தனிப்பட்ட ஆளுமையையும், குணாதிசயங்களையும் கொண்டுள்ளது.

அதேபோல ஒவ்வொரு நட்சத்திற்கும் சில நேர்மறை மற்றும் எதிர்மறை குணங்கள் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தில் சில நட்சத்திரங்களில் பிறந்த குழந்தைகள் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் அங்கு சென்றாலும் அதிகாரம் செலுத்துபவர்களாகவும், ஆள்பவர்களாகவும் இருப்பார்கள். அது எந்தெந்த நட்சத்திரங்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அஸ்வினி நட்சத்திரம்
27 நட்சத்திரத்தில் இது முதன்மையான நட்சத்திரமாகும். எனவே இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். குதிரைத் தலை அவர்களின் உறுதியை வரையறுக்கிறது. அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எங்கு சென்றாலும் விஷயங்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்கிறார்கள்.
இவர்கள் கோபம், ஆவேசம் மற்றும் உயர்ந்த நோக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்து. எனவே, அவர்கள் தலைவராகப் பிறந்தவர்கள் மற்றும் பெரிய உயரங்களை அடைய பிடிவாதமாக இருக்கிறார்கள். எனவே குழந்தைகளுக்கு இது சிறந்த நட்சத்திரமாக இருக்கிறது.
பரணி நட்சத்திரம்
பரணி நட்சத்திரம் சக்திவாய்ந்த இரண்டாவது நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் போது, அவர்களுக்கு அன்பு மற்றும் செழிப்பின் கிரகமான சுக்கிரனின் குணாதிசயங்கள் இருக்கும். இது பரணி நட்சத்திரத்தை சிறந்த நட்சத்திரங்களில் ஒன்றாக மாற்றகிறது. இதன் விளைவாக, அவர்களின் வாழ்க்கையிலும் இதயத்திலும் ஏராளமான அன்பும், வசீகரமும் நிறைந்திருக்கும்.
இந்த நட்சத்திரத்தின் குறியீட்டு பிரதிநிதித்துவம் ஒரு பெண் பிறப்புறுப்பு ஆகும். மேலும், பூமி என்ற உறுப்பு இந்த நட்சத்திரத்தின் கீழ் பிறந்தவர்கள் அதிக பெண்பால் குணங்களை கொண்டிருப்பார்கள். ஒரு தாய் தன் குழந்தையைப் பராமரிப்பது போல், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களை அரவணைப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்பு காரணமாக, இது பிறப்பதற்கு ஒரு சிறந்த நட்சத்திரம் என்று கூறப்படுகிறது.
பூச நட்சத்திரம்
பூச நட்சத்திரம் "பூ மற்றும் அம்பு" சின்னத்தால் குறிக்கப்படுகிறது. இது மிகவும் வித்தியாசமான மற்றும் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்திசாலிகள் மற்றும் உயர்ந்த லட்சியம் கொண்டவர்கள்; அவர்கள் தங்கள் லட்சியத்தை அம்பு என்று அறிவார்கள். இருப்பினும், பூவின் பகுதி அவர்களை மென்மையாகவும், மற்றவர்களிடம் கனிவானவராகவும் மாற்றுகிறது.
நீர் அறிகுறியாக இருப்பதால், அவர்கள் பொதுவாக மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மற்றவர்களை எளிதில் நம்புவார்கள். ஆனால் அவர்கள் பின்னடைவை சந்திக்கும் போது விஷயங்களை எவ்வாறு சமாளிப்பது என்பது அவர்களுக்குத் தெரியும். எந்த தோல்வியும் அவர்களை ஒருபோதும் வீழ்த்த முடியாது.
மக நட்சத்திரம்
மக நட்சத்திரம் நட்சத்திர வரிசையில் பத்தாவது நட்சத்திரமாக இருக்கிறது. அதன் சின்னம் ஒரு தங்க சிம்மாசனம் அல்லது ஒரு பல்லக்கு ஆகும், அதாவது அவர்கள் அரசருக்குரிய குணங்கள் கொண்டவர்கள். எனவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஆதிக்கமும், தலைமையும் இருமடங்காக அதிகரிக்கிறது. மேலும் இவர்கள் தங்கள் கோபத்தை எப்படி கட்டுப்படுத்தி முன்னேற வேண்டுமென்று நன்கு அறிந்தவராக இருப்பார்கள்.
உங்கள் குழந்தை இந்த நட்சத்திரத்தில் பிறந்தால், அவர்கள் வாழ்வில் பெரிய விஷயங்களை சாதிக்கப் பிறந்தவர்களாக இருப்பார்கள். ஜோதிடம் கணிப்பது போல, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொதுவாக அவர்கள் எந்தத் துறைக்குச் சென்றாலும் ஆள்பவர்களாக இருப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












