Latest Updates
-
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது!
12 மாதங்கள் கழித்து பொங்கல் முடிந்து உருவாகும் மங்களாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
Pongal 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதுடன் அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப மற்றும் ராஜயோகங்களை உருவாக்குகின்றன. அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஒரு சக்தி வாய்ந்த ராஜயோகம் உருவாகவுள்ளது. அது தான் மங்களாதித்ய ராஜயோகம். வருகிற ஜனவரி 14 ஆம் தேதி கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் மகர ராசிக்குள் நுழையவுள்ளார். இந்நாள் தான் மகர சங்கராந்தி. அதைத் தொடர்ந்து ஜனவரி 16 ஆம் தேதி கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் மகர ராசிக்குள் நுழையவிருக்கிறார்.

இதனால் மகர ராசியில் சூரியன் மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் மிகவும் சக்தி வாய்ந்த மங்களாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.
இதன் விளைவாக சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். செல்வமும், சொத்துக்களும் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. இப்போது 2026 ஆம் ஆண்டின் பொங்கல் முடிந்து சூரியன் மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் உருவாகும் மங்களாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் சூரியனின் சேர்க்கையால் மங்களாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் செயல்திறன் மேம்படும். தைரியமும், வீரமும் அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும் மன அழுத்தம் குறைந்து, மனநலம் மேம்படும்.
மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் மங்களாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வேலைகள் அனைத்தும் வேகமாக நடக்கும். தடைபட்ட திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடையும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். சொத்துக்களை வாங்குவதன் மூலமும், விற்பதன் மூலமும் நல்ல லாபம் கிடைக்கும்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் சூரியனின் சேர்க்கையால் மங்களாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவற்றை பெறும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறக்கூடும். வணிகத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். தன்னம்பிக்கை இரட்டிப்பாக உயரும். துணிச்சலான முடிவுகளை எடுத்து நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். புதிதாக ஏதாவது தொடங்கினால், அதில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications