உங்க நட்சத்திரத்தை சொல்லுங்க.. உங்க குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...

Personality Traits Of 27 Nakshatras: இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட ராசி மற்றும் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களாக இருப்பர். வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 9 கிரகங்களால் நிர்வகிக்கப்படுகின்றன.

எப்படி ஒருவரது ராசியைக் கொண்டு அந்நபரின் குணாதிசயங்கள், எதிர்காலம் போன்றவை கணித்து கூறப்படுகிறதோ, அதேப் போல் ஒருவரது நட்சத்திரத்தைக் கொண்டும் அந்நபரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம். சொல்லப்போனால், ஒருவரது ராசியை விட நட்சத்திரம் அந்நபரைப் பற்றி சரியாக தெரியப்படுத்தும். கீழே 27 நட்சத்திரங்களும், அந்த நட்சத்திரக்காரரின் குணாதிசயங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

Personality Traits Of 27 Nakshatras or Birth Stars In Tamil

1. அஸ்வினி

27 நட்சத்திரங்களில் அஸ்வினி முதன்மையான நட்சத்திரமாகும். இந்த அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேது. இந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் வலுவான ஆளுமைகளைக் கொண்டவர்கள். வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் அவர்களின் உறுதிப்பாடு ஒப்பிடமுடியாதது. வெற்றியை அடைய எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அழகான உறவுகளை வளர்க்க விரும்புவார்கள் மற்றும் அவர்களுக்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருப்பார்கள்.

2. பரணி

பரணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். இந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் உண்மையாக இருப்பார்கள். புத்திசாலிகள் மற்றும் விசுவாசமானவர்கள். எப்போதும் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் கவர்ச்சிகரமான ஆளுமையையும், தோற்றத்தையும் கொண்டிருப்பார்கள். வலுவான மன உறுதியைக் கொண்டிருப்பார்கள். ஏதாவது ஒன்றை முடிவு செய்தவுடன், அதை அடையும் வரை அவர்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். இந்த நட்சத்திரக்காரர்கள் பெரும்பாலும் செல்வந்தர்களாக இருப்பர்.

3. கிருத்திகை

கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன். இந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் மிகவும் உந்துதல் கொண்டவர்கள். எனவே இவர்களுக்கு தங்கள் இலக்குகளை அடைய வெளிப்புற ஊக்கம் தேவையில்லை. நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். அன்பும் பாசமும் நிறைந்தவர்கள்.

4. ரோகிணி

ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். இந்த நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் பொருள் சார்ந்தவர்களாகவும், சுயநலவாதிகளாகவும் இருப்பர். எல்லாவற்றிலும் உள்ள நேர்த்தியைப் பாராட்டுவார்கள். எதைப் பார்த்தாலும் அதில் உள்ள அழகைப் பாராட்ட தவறமாட்டார்கள். வலுவான அதிகார உணர்வைக் கொண்டிருப்பார்கள்.

5. மிருகசீரிடம்

மிருகசீரிட நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். இந்த நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் இயல்பாகவே வாழ்க்கையில் காணும் அழகால் ஈர்க்கப்படுகிறார்கள். மிகுந்த நகைச்சுவை உணர்வையும், சுத்தமான பாசத்தையும் கொண்டவர்கள். எப்போதும் ஏதாவது ஒரு விஷயத்தில் தங்களை பிஸியாக வைத்திருப்பார்கள். உயர்ந்த ஒழுக்கத்தையும், புத்திசாலித்தனத்தையும் கொண்டிருப்பார்கள்.

6. திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி ராகு. இந்த நட்சத்திரக்காரர்கள் வெளியே கடுமையானவராக தென்பட்டாலும், மனதளவில் மென்மையானவர்கள். உணர்ச்சி ரீதியாக புத்திசாலிகள். இருப்பனும் அவர்களின் தூய்மையான பாசத்தால் நிறைய தியாகங்களைச் செய்வார்கள். எங்கு சென்றாலும், தனித்து நிற்பார்கள்.

7. புனர்பூசம்

புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான். இந்த நட்சத்திரக்காரர்கள் ஆற்றல் மிக்கவர்கள். தங்கள் வழியில் வரும் எந்தவொரு துன்பத்தையும் எதிர்கொள்ளும் அளவில் அற்புதமான மன வலிமையைக் கொண்டிருப்பார்கள். வாழ்வில் எப்போதும் சரியான பாதையை தேர்ந்தெடுக்கும் ஒரு சிறந்த உள்ளுணர்வைக் கொண்டிருப்பார்கள்.

8. பூசம்

பூச நட்சத்திரத்தின் அதிபதி சனி. இந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் ஈடுபாடுள்ள ஆளுமைகளைக் கொண்டிருப்பார்கள். எப்போதும் எளிமையாக நடந்து கொள்வார்கள். எந்த பிரச்சனைக்கும் இவர்களை அணுக வசதியாக இருக்கும். இவர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் சமூகத்தில் மதிக்கப்படுகின்றன.

9. ஆயில்யம்

ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிபதி புதன். இந்த நட்சத்திரக்காரர்கள் புத்தசாலிகள். இவர்கள் பெரும்பாலும் தோற்றத்தைக் கொண்டு ஒருவரிடம் பழகுவார்கள். ஆழ்ந்த சிந்தனையாளர்கள். நல்ல அறிவுத்திறன் மற்றும் ஞானத்தைக் கொண்டவர்கள். இவர்களின் மன உறுதி அவர்கள் விரும்பியதைச் சாதிக்க உதவுகிறது.

10. மகம்

மக நட்சத்திரத்தின் அதிபதி கேது. இந்த நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் உயர்ந்த கண்ணிய உணர்வைக் கொண்டிருப்பார்கள். இவர்கள் எங்கு இருந்தாலும் எப்போதும் அந்த பகுதியில் மற்றவர்களால் கொண்டாடப்படுவார்கள். விளையாட்டுத்தனமான நடத்தையால், அவர்கள் மிகவும் அணுகக்கூடியவர்களாகத் தோன்றுகிறார்கள். இவர்களின் கவர்ச்சியான தோற்றமே மற்றவர்களை அதிகம் ஈர்க்கிறது.

11. பூரம்

பூர நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். இந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் சுய பராமரிப்பு மற்றும் ஓய்வின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டவர்கள். மன அமைதியைக் குலைக்கும் எதையும் பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

12. உத்திரம்

உத்திர நட்சத்திரத்தின் அதிபதி சூரியன். இந்த நட்சத்திரக்காரங்கள் மிகவும் இரக்கமுள்ளவர்கள் மற்றும் அனைவரிடமும் அனுதாபம் கொண்டிருப்பார்கள். மிகவும் தாராள மனப்பான்மை கொண்டவர்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக எதையும் மனமுவந்து கொடுக்கத் தயாராக இருப்பார்கள். எப்போதும் சரியானவர்களாக இருக் விரும்புவார்கள்.

13. அஸ்தம்

அஸ்த நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். இந்த நட்சத்திரக்காரர்கள் மிகுந்த அறிவும் ஞானமும் கொண்டவர்கள். தங்களிடம் உள்ளதைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருப்பார்கள். அதனால் இவர்கள் கருணை மற்றும் தாராள மனப்பான்மை கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். மிகவும் பணிவாக நடந்து கொள்வார்கள்.

14. சித்திரை

சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். இந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள். தங்கள் உறவுகளுடனும், பொருள் சார்ந்த விஷயங்களுடனும் ஆழமாக தொடர்பு கொள்கிறார்கள். கவனமுள்ளவர்களாக இருந்தாலும், சில சமயங்களில் தீர்ப்பளிக்கும் உணர்வை இழக்கிறார்கள். புத்திசாலி மற்றும் தாராள மனப்பான்மை கொண்டவர்கள்.

15. சுவாதி

சுவாதி நட்சத்திரத்தின் அதிபதி ராகு. இந்த ராசிக்காரர்கள் தகவல் தொடர்பு கொள்வதில் சிறந்தவர்கள். பெரிய விஷயங்களையும், அவர்கள் நினைத்த அனைத்தையும் சாதிப்பார்கள். புத்திசாலிகள், தங்கள் சொந்த வழிகளில் விஷயங்களைச் செய்வார்கள். சுதந்திர உணர்வை விரும்புவார்கள்.

16. விசாகம்

விசாக நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான். இந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் எந்த அநீதியையும் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள். வெற்றியை அடைய எதையும் செய்யக்கூடிய வகையில் மிகவும் உறுதியான நபர். விதிமுறைகளை அதிகம் பின்பற்றமாட்டார்கள்.

17. அனுசம்

அனுச நட்சத்திரத்தின் அதிபதி சனி. இந்த நட்சத்திரக்காரர்கள் மிகவும் அன்பானவர்கள், அக்கறையுள்ளவர்கள் மற்றும் பாசமுள்ளவர்கள். எப்போதும் நேர்மறையான மனநிலையை வெளிப்படுத்துவார்கள். எதற்கும் ஆக்ரோஷமாக இருக்கமாட்டார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உதவ தங்கள் வழியில் இருந்து வெளியேறுவார்கள்.

18. கேட்டை

கேட்டை நட்சத்திரத்தின் அதிபதி புதன். இந்த நட்சத்திரக்காரர்கள் மிகவும் மர்மமானவர்கள். அவர்களை யாரும் முழுமையாக அறிந்து கொள்ள மாட்டார்கள். சியி நட்பு வட்டாரத்தைக் கொண்டிருப்பார்கள். சமூகமயமாக்கல் அவர்களுக்குப் பிடிக்காது. உண்மையை தொடர்ந்து தேடுவார்கள்.

19. மூலம்

மூல நட்சத்திரத்தின் அதிபதி கேது. இந்த நட்சத்திரக்காரர்கள் எந்த சூழ்நிலையிலும் உண்மையைத் தேடும் மிகவும் ஆர்வமுள்ள நபர். தங்கள் நடத்தையால் அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார்கள். யாராலும் அவர்களைக் கணிப்பது மிகவும் கடினம்.

20. பூராடம்

பூராட நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். இந்த நட்சத்திரத்திரக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகவும் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். மிகவும் துணிச்சலானவர்கள், எதற்கும் அஞ்சமாட்டார்கள். இவர்களை வெல்வது என்பது முடியாது. மிகுந்த உள்ளுணர்வு மற்றும் மன உறுதியைக் கொண்டவர்கள்.

21. உத்திராடம்

உத்திராட நட்சத்திரத்தின் அதிபதி சூரியன். இந்த நட்சத்திரக்காரர்கள் ஆக்ரோஷமானவர்கள். எதையாவது சாதிக்க முடிவு செய்துவிட்டால், அதை மன உறுதியுடன் செய்து முடிப்பார்கள். பொறுப்புக்களை புரிந்து நடந்து கொள்வார்கள். பாராட்டத்தக்க தலைமைத்துவ பண்புகளைக் கொண்டிருப்பார்கள்.

22. திருவோணம்

திருவோண நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான். இந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் உற்சாகமானவர்கள். இவர்கள் இருக்கும் இடம் மற்றவர்களை வசீகரிக்கும் வகையில் இருக்கும். தங்களைச் சுற்றியிருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்கள்.

23. அவிட்டம்

அவிட்ட நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். இந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள். சமூகத்தில் எப்போதும் மரியாதை பெறுவார்கள். பணம் சம்பாதிக்கும் உள்ளார்ந்த திறனைக் கொண்டிருப்பார்கள். கூர்மையான மனம் மற்றும் புத்திசாலித்தனமான அறிவுத்திறனைக் கொண்டவர்கள்.

24. சதயம்

சதய நட்சத்திரத்தின் அதிபதி ராகு. இந்த நட்சத்திரக்காரர்கள் சுய புரிதலின் பாதையில் நடப்பார்கள். மிகவும் வலிமையானவர்கள். தங்கள் வழியில் வரும் அனைத்தையும் உறுதியாக நம்புகிறார்கள். இதனால் அவர்கள் சில நேரங்களில் உடைக்க கடினமானவர்களாக கருதப்படுகிறார்கள்.

25. பூரட்டாதி

பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான். இந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் திறந்த மனதுடையவர்கள். எப்போதும் எதையாவது கற்க நினைப்பார்கள். தங்கள் வயதுக்கு மீறிய புத்திசாலிகள், மற்றவர்கள் சொல்வதைக் கேட்க எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.

26. உத்திரட்டாதி

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி சனி. இந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் புத்திசாலிகள், அறிவாற்றல் மிக்கவர்கள். தொண்டுகளை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள். முக்கியமாக கவர்ச்சிகரமான ஆளுமையைக் கொண்ட ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள்.

27. ரேவதி

ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன். இந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் மிகவும் துணிச்சலானவர்கள். ஒருபோதும் தங்கள் உணர்ச்சிகள் தங்கள் அறிவை வெல்ல விடாமல் ஆன்மீக வாழ்க்கையை நடத்துவார்கள். வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் போது இவர்கள் தங்கள் உள்ளுணர்வைக் கேட்டு நடப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மிக விரைவில் திருமணம் நடக்கும். இவர்கள் தொழில்நுட்ப வேலைகளில் திறமையானவர்களாக இருப்பார்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Desktop Bottom Promotion