Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
இந்த 4 நட்சத்திரத்தில் பிறந்தவங்க அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்... இவங்களுக்கு பெரிய ரசிக கூட்டமே வரும்...!
பணத்தை விட ஒருவருக்கு பெரிய போதையைத் தருவது எதுவென்றால் அது புகழ்தான். புகழ் பெற்றவராக இருக்க வேண்டுமென்பதுதான் அனைவரின் விருப்பமாக இருக்கும். தற்போது பல்வேறு காரணங்களுக்காக ஒருவர் புகழ் பெற்றவராக மாறலாம். ஒருவர் நடிப்பு, எழுத்து மற்றும் இசை என எந்த துறையில் வேண்டுமென்றாலும் புகழ் பெறலாம். ஆனால் அனைவருக்கும் புகழ் பெற்றவராக மாற்றும் அதிர்ஷ்டம் இருப்பதில்லை.
வெற்றியும், புகழும் ஒரு சிலருக்கு மட்டுமே என்று தோன்றும் சமூகத்தில் ஜோதிடம் ஒரு தனித்துவமான பார்வையை வழங்குகிறது. கடின உழைப்பும், விடாமுயற்சியும் வெற்றியின் முக்கிய கூறுகளாக இருந்தாலும், சிலர் தாங்கள் பிறந்த தருணத்திலிருந்தே புகழைப் பெற தயாராகின்றனர்.

ஜோதிடத்தின் படி சில நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புகழை அடையும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் எந்தெந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பரணி
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அளவில்லா ஆற்றல் மற்றும் விடாமுயற்சிக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் தங்கள் குறிக்கோள்களை இடைவிடாமல் பின்தொடர்கிறார்கள், மேலும் அவர்களின் சிறப்பு என்னவெனில் தங்கள் துறைகளில் தங்களுக்கென தனித்துவமான அடையாளத்தை உருவாக்குகிறார்கள்.
இந்த நட்சத்திரம் சுக்கிரனால் ஆளப்படுவதால், வாய்ப்புகளை தேடவும், கூட்டத்திலிருந்து தனித்து நிற்கவும் ஒருபோதும் தயங்கவதில்லை. அவர்கள் தங்கள் புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் துணிச்சலான முயற்சிகளுக்காக புகழ் பெற்றவர்களாக மாறுவார்கள்.
கேட்டை
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சக்திவாய்ந்த ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் திறமையை சரியாகக் கண்டுபிடித்து, கஷ்டங்களைத் தாண்டி உயரும் திறனுக்காகப் பெயர் பெற்றவர்கள். தேவர்களின் அதிபதியான இந்திரனால் ஆளப்படும் அவர்கள் வாழ்க்கையில் செல்வத்தையும், புகழையும் பெறுபவர்களாக இருக்கிறார்கள்.
அனைவரும் அவர்களின் வசீகரமான ஆளுமையால் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் புதுமையான சிந்தனைகள் மற்றும் அவர்களின் உண்மையான ஆர்வங்களை தங்கள் தொழிலில் செலுத்தும் திறன் காரணமாக புகழ் பெற்றவர்களாக மாறுகிறார்கள்.
பூரம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இயல்பிலேயே காந்தத்தன்மை கொண்டவர்கள் மற்றும் மற்றவர்களை தங்கள் பக்கம் எளிதில் ஈர்க்கிறார்கள். அவர்களின் சிறப்பே மற்றவர்களை விட அவர்களிடம் நிறைந்திருக்கும் தன்னம்பிக்கைதான், இது அவர்களை தலைவர்களாகவும், சிறந்த கலைஞர்களாகவும் மாற்றுகிறது.
அவர்கள் பிரபலமாக இருப்பதை ரசிக்கிறார்கள், மேலும் எப்போதும் புகழ் வெளிச்சத்தில் இருப்பதை கனவு காண்கிறார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய பகுதிகளில் சிறந்து விளங்க பாடுபடுகிறார்கள், ஏனெனில் அவர்கள் போற்றுதலையும் கவனத்தையும் விரும்புகிறார்கள்.
திருவாதிரை
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெளிவான பேச்சுத்திறன் கொண்டவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள், அவர்கள் தங்கள் வார்த்தைகளால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதில் திறமையானவர்கள். அவர்கள் உரையாடல்களை விரும்புவார்கள், மேலும் அனைத்து தரப்பு மக்களுடன் ஆழமான தொடர்புகளை ஏற்படுத்த முடியும்.
இது அவர்களின் நெட்வொர்கை மிகவும் பெரியதாக மாற்றுகிறது, ஏனெனில் அவர்கள் காலப்போக்கில் அதிக எண்ணிக்கையிலான நண்பர்களை உருவாக்குவார்கள். அவர்களின் வசீகரிக்கும் மற்றும் அன்பான ஆளுமையின் விளைவாக அவர்களுக்கு எப்போதும் பெரிய ரசிக பட்டாளம் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

