Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்களின் இதயம் கல்லு மாதிரி இருக்குமாம்... இவங்கள காதலிக்கிறவங்க பாவம்...!
காதல் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் வரக்கூடிய தவிர்க்க முடியாத ஒரு உணர்வாகும். ஒருவரின் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுவதும் காதல்தான், ஒருவரின் வாழ்க்கையை நரகமாக மாற்றுவதும் காதல்தான். இதை தீர்மானிப்பது நாம் எபப்டிப்பட்டவர்களை காதலிக்கிறோம் என்பதைப் பொறுத்தது.
'அணுஅணுவாக சாக முடிவெடுத்தபின் காதல்தான் சிறந்த வழி' என்று கூறுவார்கள். அது நூறு சதவீதம் உண்மையானதாகும். நீங்கள் காதலிக்கும் நபர் உணர்ச்சி ரீதியாக அணுக முடியாதவராக இருக்கும்போது இது எவ்வளவு உண்மையானது என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஜோதிடத்தின் படி சில மாதங்களில் பிறந்தவர்கள் எளிதில் அணுக முடியாத இதயத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அவர்களும் காதலிக்க மாட்டார்கள், அவர்களை காதலிப்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். இந்த மாதங்களில் பிறந்தவர்கள் ஒருபோதும் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள். ஒரு உறவில் முழுமையாக ஈடுபட அவர்கள் பல ஆண்டுகள் கூட எடுத்துக் கொள்ளலாம். இந்த பதிவில் எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் இப்படிப்பட்ட ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
ஜனவரி
ஜனவரியில் பிறந்தவர்கள் தங்கள் வலுவான மன உறுதிக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் பெரும்பாலும் வெற்றியை நோக்கியவர்களாகவும், தங்கள் லட்சியங்களில் கவனம் செலுத்துபவர்களாகவும் இருப்பார்கள், இதனால் அவர்கள் தனிப்பட்ட உறவுகளிலிருந்து வெகுதொலைவில் இருக்கலாம்.
ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் எதார்த்தமானவர்கள் மற்றும் ஒழுக்கமானவர்கள், உணர்ச்சிகளை விட புத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். வாழ்க்கை மீதான இந்த எதார்த்த அணுகுமுறை அவர்கள் தங்கள் காதல் உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைத் தடுக்கிறது. அவர்கள் தங்கள் உணர்வுகளை மறைத்து வைக்க விரும்புகிறார்கள், இதனால் மற்றவர்கள் அவர்களின் உணர்ச்சித் தடைகளை உடைப்பது மிகவும் கடினமாக இருக்கும். ஒருவேளை நீங்கள் அவர்களின் நம்பிக்கையைப் பெற்று விட்டால், நீங்கள் ஒரு விசுவாசமான மற்றும் உறுதியான துணையைப் பெறுவீர்கள்.
மார்ச்
மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் கனவு காண்பவர்களாகவும், தங்கள் தனி உலகில் மூழ்கி இருப்பவர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு வளமான உள் உலகம் இருக்கிறது, அதை அவர்கள் மற்றவர்களுடன் அரிதாகவே பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களின் இந்த போக்கு அவர்களை உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்களாக தோன்றச் செய்யலாம்.
அவர்கள் மிகவும் உணர்திறன் உடையவர்களாகவும் இருப்பார்கள், மேலும் கடந்த கால வலிகள் அவர்களை மீண்டும் ஒரு உறவில் இணைய விடாமல் தடுக்கலாம். மார்ச் மாதத்தில் பிறந்த ஒருவரின் இதயத்தை அடைய, நீங்கள் பொறுமையையும் புரிதலையும் கடைபிடிக்க வேண்டும்.
ஜூன்
ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் விளையாட்டுத்தனமான சமூக வண்ணத்துப்பூச்சிகளாக இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களுடன் பழகுவதை ரசிக்கும் அதே வேளையில், அவர்கள் பெரும்பாலும் தங்கள் உண்மையான உணர்வுகளை மறைத்து வைத்திருப்பார்கள். அவர்கள் சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளக் கூடியவர்கள், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வது கடினம்.
ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் உணர்ச்சிபூர்வமான உறவுகளைத் தவிர்க்க முனைகிறார்கள். அவர்கள் பாதிப்பு மற்றும் அது கொண்டு வரக்கூடிய வலியை நினைத்து பயப்படுகிறார்கள், இதனால் மற்றவர்கள் அவர்களின் உண்மையான குணத்தை தெரிந்து கொள்வது கடினம். அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு, நீங்கள் அவர்களின் மனதை உடைக்க மாட்டிர்கள் என்று அவர்கள் நம்ப வேண்டும்.
அக்டோபர்
அக்டோபரில் பிறந்தவர்கள் தங்கள் வசீகரத்திற்கும் ராஜதந்திரத்திற்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள் தங்கள் உறவுகளில் நல்லிணக்கத்தை உருவாக்குவதில் சிறந்தவர்கள், ஆனால் பெரும்பாலும் தங்கள் உண்மையான உணர்வுகளை மறைப்பவர்களாக இருப்பார்கள். அக்டோபரில் பிறந்தவர்கள் காதல் விஷயங்களில் எளிதில் கைக்கு எட்டாதவர்களாக இருக்கலாம், அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை நன்கு பாதுகாக்க விரும்புகிறார்கள்.
அவர்கள் வாழ்க்கையில் சமநிலை மற்றும் அமைதியை மதிக்கிறார்கள், அவர்கள் ஆழ்ந்த உணர்ச்சி மோதல்களைத் தவிர்க்கலாம். அவர்களுடன் ஆழமான மட்டத்தில் இணைவதற்கு, நீங்கள் நம்பிக்கை மற்றும் நிலையான சூழலை உருவாக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












