Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தைகளாம்... நீங்க பிறந்த மாதம் என்ன?
ஜோதிட சாஸ்திரம் பல நூற்றாண்டுகளாக மக்களின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள கோடிக்கணக்கான மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஜோதிடத்தில் ஒருவரின் பிறந்த ராசி, மாதம், நட்சத்திரம் மற்றும் நேரம் என அனைத்துமே முக்கியமானதாகும். இவைதான் ஒருவரின் ஆளுமை மற்றும் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தீர்மானிக்கிறது.
நாம் அனைவருமே கடவுளின் குழந்தைகள்தான். அனைவருக்குமே கடவுளின் ஆசீர்வாதம் நிறைந்திருக்கும். விதிவிலக்காக கடவுளின் கூடுதல் அன்பையும், ஆசீர்வாதத்தையும் பெற்றவர்களாக இருப்பார்கள். அதற்கு காரணம் அவர்களின் பிறந்த மாதமாக இருக்கலாம். சில மாதங்களில் பிறந்தவர்கள் கடவுளின் கூடுதல் அன்பை பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் அவர்களுக்கு துணையாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் கடவுளின் செல்லக் குழந்தைகளாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மார்ச்
மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் விடாமுயற்சி, மன உறுதி மற்றும் துணிச்சல் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அசைக்க முடியாத ஆற்றலையும், இயற்கையான உற்சாகத்தையும் வரமாக பெற்றவர்கள். அவர்கள் தங்கள் இலக்குகளை நோக்கி நிற்காமல் ஓடுவார்கள், மேலும் எப்படிப்பட்ட சவாலையும் எளிதாக சமாளிக்கிறார்கள். அவர்களுக்கு எப்போதும் கடவுளின் அருள் துணையாக இருக்கும். அவர்களின் ஆர்வம் மற்றும் உறுதியால் அவர்கள் தலைவராக இருப்பார்கள்.
ஜூலை
ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் வசீகரம், நம்பிக்கை மற்றும் தலைமைத்துவம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் இந்த சக்திவாய்ந்த குணங்கள் கடவுள் அவர்களுக்கு வரமாகும். காட்டின் ராஜாவைப் போலவே, அவர்கள் எங்கு சென்றாலும் அனைவரிடமிருந்தும் மரியாதை மற்றும் அங்கீகாரத்தை அடைவார்கள். சிம்ம ராசிக்காரர்கள் சூரியனின் பரிசுகளால் ஒளியைப் பரப்புகிறார்கள். அவர்கள் தங்களுடையதுடிப்பான இருப்பு மற்றும் படைப்பு திறன்களால் உலகையே பிரகாசிக்கச் செய்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை முழுவதும் செல்வம் மற்றும் புகழால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் தனித்துவமானவர்கள். அவர்கள் எப்போதும் அமானுஷ்ய விஷயங்கள் மீது ஆர்வத்துடன் இருப்பார்கள் மற்றும் ஆன்மீக உலகத்துடன் நெருக்கமாக இணைந்திருப்பார்கள். மென்மையான ஆன்மாவான இவர்கள் கடவுளால் படுக்கப்படுபவர்களாக இருப்பார்கள். கடவுளின் அருள் அவர்களுக்கு விதிவிலக்கான படைப்பாற்றலையும், உத்வேகத்தையும் அளிக்கிறது. அதனால் அவர்கள் கலைத்துறையில் மிகப்பெரிய சாதனைகளை செய்வார்கள். அவர்கள் எப்போதும் கடவுளுக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள்.
அக்டோபர்
அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் அன்பான உறவுகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையின் அனைத்து இன்பங்களையும் அனுபவிப்பதற்காக பிறந்தவர்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் நிதி வசதிகள், உறுதியான, நீடித்த உறவுகள் மற்றும் அசைக்க முடியாத நிலைத்தன்மை ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது அவர்களுக்கு முழுமையான வாழ்க்கையை அளிக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












