Latest Updates
-
வார ராசிபலன் (02 August 2026-08 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
ராகு-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம்: இந்த 3 ராசிக்காரங்க சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போறாங்களாம் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி பச்சடி ரெசிபி - இப்படி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
சன்டே ஸ்பெஷல் திருவனந்தபுரம் சிக்கன் ப்ரை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2026-ன் கடைசி சூரிய கிரகணத்தால் தீராத கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Perukku 2026: ஆடிப்பெருக்கு எப்போது? அந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
பூமியின் அழிவு எப்போது வரப்போகிறது தெரியுமா? அதுவும் இப்படித்தான் நடக்கப்போகுதாம் - ஷாக் ஆகாதீங்க -
நாளை உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
இந்த 4 ராசிக்காரங்க அவங்கள பிடிச்சவங்களுக்காக உயிரையும் கொடுப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் சின்ன வெங்காய குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
இந்த 4 மாதங்களில் பிறந்தவங்க எல்லோரையும் காப்பாற்றும் ஹீரோவாக இருப்பார்களாம்... நீங்க பிறந்த மாதம் என்ன?
ஜோதிட சாஸ்திரம் ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தை பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது. ஒருவரின் பிறந்த ராசி மற்றும் மாதம் அவர்களின் தனிப்பட்ட ஆளுமை, அவர்கள் உறவுகளில் எப்படி செயல்படுகிறார்கள் மற்றும் மற்றவர்களுடன் எப்படி பழகுகிறார்கள் என்பது நிர்ணயிக்கிறது. சில மாதங்களில் கருணை மற்றும் பச்சாதாபத்துடன் எப்போதும் மற்றவர்களுக்கு உதவ தயாராக இருப்பார்கள்.
இந்த குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் அவர்களின் ஆளுமையாலும் சக்திவாய்ந்த உள்ளுணர்வாலும் மற்றவர்களுக்கு எப்போதும் பாதுகாப்புக் கவசமாக செயல்படுவார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் உணர்ச்சிபூர்வமான ஆதரவு, ஆபத்து கால உதவிகள் மற்றும் உண்மையான அக்கறை மூலம் அவர்களுடன் இருப்பவர்களை ஆபத்துகளிலிருந்தும், தவறான முடிவுகளிலிருந்தும் பாதுகாக்கிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளும்.

பிப்ரவரி
பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் அவர்கள் விரும்புபவர்களுக்கு பாதுகாக்கும் தேவதைகளாக இருக்கிறார்கள். அவர்கள் தன்னிச்சையானவர்கள், நேர்மையானவர்கள், சில சமயங்களில் விசித்திரமானவர்கள், ஆனால் எப்போதும் அவர்களுக்கு பிடித்தவர்களை விட்டுக்கொடுத்தகாதவர்கள்.
அவர்களின் ஒரு வார்த்தை ஒருவரின் மனநிலையை மாற்றும் சக்தி வாய்ந்தது. அவர்களின் இருப்பு அமைதியான சூழலை உருவாக்கும். பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களுடன் இருப்பது வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதை அனைவருக்கும் நினைவூட்டுகிறது.
ஏப்ரல்
ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் அவர்களின் நண்பர்கள் வாழ்க்கையில் அமைதியையும், நிலைத்தன்மையையும் உருவாக்குகிறார்கள் மேலும் அவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையும் ஈர்க்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களுக்காக பெரிய பெரிய செயல்களை செய்ய மாட்டார்கள், ஆனால் எப்போதும் வார்த்தைகள் மற்றும் சின்ன சின்ன செயல்கள் மூலம் ஆதரவை வழங்குகிறார்கள்.
குழப்பங்களுக்கு மத்தியிலும் கூட, அவர்களின் அமைதியான தன்மை அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு சமநிலையைக் கண்டறிய உதவுகிறது. அவர்கள் அற்புதங்களை உருவாக்குவதில்லை, ஆனால் அற்புதங்கள் உருவாகக்கூடிய சூழ்நிலையை அவர்கள் உருவாக்குகிறார்கள்.
ஜூன்
ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் நம்பமுடியாத அளவிற்கு சக்திவாய்ந்த உள்ளுணர்வைக் கொண்டுள்ளனர், மேலும் கடினமான காலங்களில் அவர்கள் நேசிப்பவர்களை எப்போதும் கைவிட மாட்டார்கள். அவர்களின் கவனிப்பு சில நேரங்களில் அதீதமாகத் தோன்றலாம், ஆனால் அவர்களின் அதிகமான அக்கறை, அவர்களின் அன்புக்குரியவர்களை பெரும்பாலும் தவறான செயல்பாடுகளில் ஈடுபடாமல் தடுக்கிறது.
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அருகில் இருக்கும் போது அவர்களுக்கு விருப்பமானவர்கள் எப்போதும் ஒரு கவசத்தால் பாதுகாக்கப்படுவது போல உணருவார்கள், மற்றும் அவர்களை பிரச்சினைகளிலிருந்து தீவிரமாக பாதுகாப்பார்கள். அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு அவர்கள் எப்போதும் கேடயமாக இருப்பார்கள்.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் பகுத்தறிவுள்ளவர்கள், அவர்களின் தர்க்கரீதியான சிந்தனையும் அக்கறையும்தான் முக்கியமான தருணங்களில் அவர்களின் அன்புக்குரியவர்களைக் காப்பாற்றுகின்றன. மற்றவர்கள் கவனிக்காததை அவர்கள் கவனிக்கிறார்கள், மேலும் தங்களுக்கு பிடித்தவர்களை தவறுகள் அல்லது ஆபத்திலிருந்து எப்போதும் விலக்கி வைத்திருக்க அவர்கள் முயற்சிப்பார்கள். அவர்கள் உதவிகள் மட்டும் செய்வதில்லை, வழிகாட்டுதலையும் வழங்குகிறார்கள். மேலும் பெரும்பாலும் வாழ்க்கையின் இருண்ட தருணங்களிலிருந்து அவர்களை பாதுகாக்கும் சக்தியாக மாறுகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
