Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்!
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா?
October Matha Rasipalan 2026 Unlucky Zodiac Signs In Tamil: பொதுவாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இதற்கு கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு முக்கிய காரணமாகும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த மாதம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல் நிச்சயம் அனைவருக்குமே இருக்கும். குறிப்பாக எந்த ராசிக்காரர்களுக்கு இந்த அக்டோபர் மாதம் மோசமாக இருக்கும் என்பதை கொள்ள விரும்புவோம்.

அப்படி அக்டோபர் மாதத்தில் சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் வக்ர நிலையில் பயணத்தை தொடங்கவுள்ளார். மேலும் சூரியன் இந்த துலாம் ராசிக்கும், தேவர்களின் குருவான குரு பகவான் சிம்ம ராசிக்கும் செல்லவுள்ளனர். இப்படியான கிரகங்களின் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் அக்டோபர் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு பல சோதனைகளையும், சவால்களையும் தரப் போகிறது. இப்போது 2026 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு மோசமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம். உங்கள் ராசி இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முக்கியமாக பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். தொழில் ரீதியாக சற்று மந்தமாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் இன்னும் காத்திருக்க வேண்டியிருக்கும். எதிர்பாராத இடமாற்றத்தையும் சந்திக்கும் வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பண பிரச்சனையால் சிரமப்பட நேரிடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதமானது போராட்டம் நிறைந்ததாக இருக்கும். சிறு வேலைகளை செய்ய கூட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ராகு மற்றும் கேதுவால் ஒவ்வொரு வேலைகளிலும் தடைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் அதிகரித்து, மன கசப்புகள் ஏற்படலாம். நிதி ரீதியாக, இம்மாதம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இருந்தாலும், இந்த மாதத்தில் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கையும், தைரியமும் குறையும் வாய்ப்புள்ளது. செய்யும் வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும். கவனச்சிதறல்களால் வேலைகளில் முழு கவனம் செலுத்த முடியாமல் போகும். தொழில் ரீதியாக, மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நிதி ரீதியாக சற்று கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் பண பரிவர்த்தனைகளின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



