Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
அக்டோபர் மாதம் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத மாதமாக இருக்கப்போகுதாம்... உங்க ராசி என்ன?
October Horoscope 2024: ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரக மாற்றமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஒவ்வொரு மாதம் பிறக்கும்போதும் அந்த மாதத்தில் நிகழும் கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சில மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் அக்டோபர் மாதம் பிறப்பதால் அனைத்து ராசிக்காரர்கள் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த மாற்றங்கள் அவர்களின் ராசியைப் பொறுத்து சாதகமானதாகவோ அல்லது எதிர்மறையானதாகவோ இருக்கும். அந்த வகையில் சில ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் கிரக மாற்றங்களால் நேர்மறையான பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள்.

அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை என அனைத்திலும் அனுகூலமான பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
அக்டோபர் மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை அளிக்கும் மாதமாக இருக்கும். இது வியாபாரம் மற்றும் வேலை இரண்டிலுமே சுப பலன்களையும், எதிர்பாராத நன்மைகளையும் அளிக்கப் போகிறது. சொந்த தொழில் தொடங்க இது ஒரு சிறப்பான காலமாக இருக்கும்.
அது மட்டுமல்ல, வாழ்க்கையில் உங்களுக்கு பெரிய நல்ல மாற்றங்கள் வரப்போகிறது. உங்களின் எதிரிகள் மட்டும் போட்டியாளர்கள் பொறாமைப்படும் அளவிற்கு உங்களின் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் அற்புதமான மாற்றங்கள் வரும். குருபகவான் உங்களுக்கு கோடி கோடியாக கொடுக்கப்போகிறார்.
கன்னி
கன்னி ராசியினருக்கு அக்டோபர் மாதம் சாதனைகள் நிறைந்த அற்புத மாதமாக இருக்கும். உங்களின் சாதனைகள் உங்களுடையே பெயரையும், புகழையும் அதிகரிக்கும். அக்டோபர் 22 வரை எந்த வித நெருக்கடியும் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படாது. அதுமட்டுமின்றி இந்த மாதம் உங்களின் அதிகாரமும், செல்வாக்கும் அதிகரிக்கும் மாதமாகும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வேலையில் சிறப்பான முன்னேற்றம் காத்திருக்கிறது. கிரக மாற்றங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் சூழ்நிலை உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவுவதால், செய்யும் செயல்கள் அனைத்திலும் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும்.
கும்பம்
அக்டோபர் மாதம் கும்ப ராசிக்காரர்கள் கை ஓங்கும் காலமாகும். அக்டோபர் மாதத்தில் கும்ப ராசியினருக்கு சாதகமான பலன்கள் அதிகமாக இருக்கும். இதுவரை உங்களை சிரமப்படுத்தி வந்த கஷ்டங்கள் உங்களை விட்டு நீங்கும். நிதி விஷயங்களைக் கையாளும் போது கூட பெரும் நன்மைகள் கிடைக்கும்.
நீங்கள் நிதிரீதியாக மிகவும் சாதகமான காலகட்டத்தை அடையப் போகிறீர்கள். வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமென்ற உங்களின் ஆசை இந்த காலகட்டத்தில் நிறைவேறும். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், தனிப்பட்ட வாழ்க்கையிலும், திருமண வாழ்க்கையிலும் நன்மைகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
