Latest Updates
-
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
அக்டோபர் மாதம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
October 2025 Planet Transits: 2025 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த அக்டோபர் மாதம் சற்று சிறப்பானது. ஏனெனில் இந்த மாதத்தில் பல முக்கியமான கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அதுவும் அக்டோபரில் புதன், சுக்கிரன், செவ்வாய், சூரியன், குரு பகவான் போன்ற கிரகங்கள் தங்களின் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளன. இப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக, அக்டோபரில் மாளவ்ய ராஜயோகம், ருச்சக யோகம், நவபஞ்ச ராஜயோகம் போன்ற உருவாகவுள்ளன.

அதில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் அக்டோபர் மாதத்தில் 2 முறை ராசியை மாற்றவுள்ளார். முதலாவதாக அக்டோபர் 03 ஆம் தேதி துலாம் ராசிக்கும். அக்டோபர் 25 ஆம் தேதி விருச்சிக ராசிக்கும் செல்லவுள்ளார். அதைத் தொடர்ந்து அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் அக்டோபர் 09 ஆம் தேதி கன்னி ராசிக்கும், கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் அக்டோபர் 17 ஆம் தேதி துலாம் ராசிக்கும், கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் அக்டோபர் 27 ஆம் தேதி விருச்சிக ராசிக்கும் செல்லவுள்ளனர்.
முக்கியமாக அக்டோபர் 18 ஆம் தேதி குரு பகவான் கடக ராசிக்கும் செல்லவுள்ளார். இப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களினால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளின் வாழ்விலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் மிகவும் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது 2025 அக்டோபரில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் மிகவும் சிறப்பாக இருக்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இம்மாதத்தில் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் அனைத்து கிரகங்களின் ஆசிகளும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும் மற்றும் கருத்து வேறுபாடுகளும் முடிவுக்கு வரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகளும் நீங்கும். உறவினர்களிடையேயான பிணைப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மிகவும் இனிமையாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். மொத்தத்தில் நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதமானது சிறப்பானதாக இருக்கும். சனி பகவான் வக்ரமாக இருப்பதால், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவுக்கு வரும். செல்வத்தில் உயர்வு ஏற்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். எதையும் துணிந்து செய்யும் தைரியம் அதிகரிக்கும். உங்களின் முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications