அக்டோபர் மாதம் தொழில் ரீதியாக இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது... உங்க ராசி இதுல இருக்கா?

October 2025 Monthly Career Horoscope In Tamil: 2025 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த அக்டோபர் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் மாற்றங்களைக் காணக்கூடும். மேலும் அக்டோபர் மாதத்தில் குருபகவான் ராசியை மாற்றவுள்ளார். இதனால் இதுவரை வாழ்க்கையில் சந்தித்து வந்த பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

அதோடு கிரக நிலைகளின் மாற்றங்களினால் சில சுப மற்றும் ராஜயோகங்களும் உருவாகின்றன. இதன் விளைவாக சில ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களையும், இன்னும் சிலர் மோசமான பலன்களையும் பெறலாம். இப்போது அக்டோபர் மாத கிரக நிலைகளால் தொழில் ரீதியாக மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

October 2025 Monthly Career Horoscope In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் வேலையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். வேலை மற்றும் தொழிலில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். தொழிலதிபர்கள் இம்மாதம் ரிஸ்க்குகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதமானது தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். உறவுகள் வலுவடையும். இம்மாதத்தில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். அவ்வப்போது வேலையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும் அவற்றை புத்திசாலித்தனத்தால் சமாளிப்பீர்கள். பணியிடத்தில் கொடுக்கப்பட்ட இலக்குகளை அடைவதில் சிரமங்களை சந்திக்க நேரிடும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் ஒவ்வொரு வேலையிலும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால் இம்மாதம் சாதகமாக இருக்காது. எந்த முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும், சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் பணியிடத்தில் சண்டைகளை சந்திக்க நேரிடும். இம்மாதத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் வேலையை இழக்க நேரிடும். தொழிலதிபர்கள் இம்மாதத்தில் பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்பை சந்திக்க நேரிடும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதமானது தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்கள் இம்மாதத்தில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களைப் பெறுவார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் தொழிலில் குறிப்பிடத்தக்க வெற்றியைக் காண்பார்கள். பதவி உயர்வுக்கான வாய்ப்புக்கள் உள்ளன. அக்டோபர் இரண்டாம் பாதி இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். வணிகர்களுக்கு இம்மாதத்தில் மிகப்பெரிய ஒப்பந்தம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. இழப்புக்களை சந்திக்கும் வாய்ப்புள்ளதால் பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். சம்பளத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் இம்மாதத்தில் தொழிலில் எந்த ரிஸ்க் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்பை சந்திக்க நேரிடும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். வேலை அல்லது வணிகம் தொடர்பாக எந்த முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும் கவனமாக எடுக்க வேண்டும். மொத்தத்தில் அக்டோபர் தொழில் ரீதியாக மோசமான மாதமாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் வேலையை மாற்றும் எண்ணத்தைக் கொண்டிருந்தால் தவிர்க்க வேண்டும். கோபத்தால் வேலையை விடும் முடிவை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் வேலை கிடைக்காமல் அவதிப்பட நேரிடும். தொழிலதிபர்கள் இம்மாதத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் தொழில் ரீதியாக குறிப்பிடத்தக்க இழப்புக்களை சந்திக்க நேரிடும். இந்த மாதத்தில் எந்த ரிஸ்க்குகளை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையை கவனமாக செய்ய அறிவுறுப்படுகிறது. இல்லாவிட்டால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, October 1, 2025, 17:12 [IST]
Desktop Bottom Promotion