நியூமராலஜி படி இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களுக்கு 40 வயதிற்குள் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் இருக்காம்...!

Numerology: ஜோதிட சாஸ்திரம் போலவே எண்கணிதமும் ஒருவரின் ஆளுமையைத் தெரிந்து கொள்வதில் முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே பலர் எதிர்காலத்தையும் தங்களின் அதிர்ஷ்டத்தையும் கணிக்க எண் கணிதத்தை நம்பியிருக்கிறார்கள். எண் கணிதம் ஒருவரின் வாழ்க்கைப் பற்றிய அனைத்து அம்சங்களையும் விளக்குகிறது. குறிப்பாக ஒருவரின் நிதி நிலைமை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை விளக்குகிறது.

எண் கணிதத்தின்படி, குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் இளம் வயதிலேயே தங்கள் வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் பெற முடியும் குறிப்பாக 40 வயதுக்குள் அனைத்து உயரங்களையும் அடைய முடியும். இந்த பதிவில் எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்கள் 40 வயதிற்குள் அனைத்து சாதனைகளையும் செய்பவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

Numerology Which Date Born People Become Rich Before the Age of 40 in Tamil

அனைத்து மாதத்திலும் 1, 10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்

இந்த தேதிகளில் பிறந்தவர்கள், எண் 1 ஆல் ஆளப்படுகிறார்கள். வாழ்க்கையில் அனைத்து தருணங்களிலும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இருக்கும். அதுவே அவர்களின் வாழ்க்கையின் வெற்றிக்கும், அதிர்ஷ்டத்துக்கும் அடிப்படையாகும். அவர்களின் கடின உழைப்பு அவர்கள் வாழ்க்கையில் வெற்றியை நோக்கி அவர்களை வேகமாக அழைத்துச் செல்லும். அவர்கள் தலைமைப்பதவி வகிக்கும் தொழில்களில் மிகப்பெரிய வெற்றியை அடைவார்கள்.

அனைத்து மாதத்திலும் 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்

நீங்கள் இந்த தேதிகளில் பிறந்தவராக இருந்தால், நீங்கள் எண் 2 ஆல் ஆளப்படுகிறீர்கள். அவர்களின் பொறுப்புணர்வே அவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்கிறது. எனவே, அவர்கள் எப்போதும் தலைமை பதவிகளில் சிறந்து விளங்குகிறார்கள். அவர்களின் வாழ்க்கையில் உறவுகள் மற்றும் சரியான நேரத்தில் ஏற்படும் மாற்றங்கள் நிதி வெற்றிக்கு வழிவகுக்கும். எனவே, பெரும்பாலும் 40 வயதிற்குள், இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பெரும்பாலும் வெற்றிகரமான நிறுவனங்களைதொடங்கி அவற்றில் தங்கள் வெற்றியை உறுதி செய்வார்கள்.

அனைத்து மாதத்திலும் 4, 13 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எண் 4 ஆல் ஆளப்படுகிறார்கள். சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவதே அவர்களின் வாழ்க்கையின் நோக்கமாகும். அதனால் இளம் வயதிலேயே அதற்காக உழைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். எனவே அளவற்ற செல்வம் பற்றி அவர்கள் இளம் வயது முதலே மனதில் துல்லியமாகக் கணக்கிடுகிறார்கள். குறிப்பாக நிதி, பொறியியல் அல்லது மேலாண்மை போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் மற்றும் நிதி ஆதாயம் உள்ளது. எனவே அவர்கள் தங்களின் பிற்கால வாழ்க்கைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை.

அனைத்து மாதத்திலும் 5, 14 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்ட எண்ணான 5-ஆல் ஆளப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் சாகச நடவடிக்கைகளில் தங்கள் இளமைக்காலத்தை செலவிடுகிறார்கள். அவர்கள் பயணம் செய்து அதன் மூலம் அளவிலா நிதி பலன்களை உருவாக்குகிறார்கள். மேலும் 40 வயதிற்குள், இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற முடியும். எந்த ஒரு சாதகமற்ற சூழ்நிலையையும் அவர்களின் திறமையால் நேர்மறையானதாக மாற்ற அவர்களால் முடியும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, December 25, 2024, 19:32 [IST]
Desktop Bottom Promotion