Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
Numerology: நியூமராலஜி படி இந்த தேதில பிறந்தவங்க மத்தவங்கள விட எப்பவும் அதிபுத்திசாலியாக இருப்பார்களாம்...!
Numerology: ஜோதிட சாஸ்திரத்தில், ஒருவரின் எதிர்காலம் ஒன்பது கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் கண்டறியப்படுகிறது, அதேபோல் எண் கணிதத்தின் உதவியுடன், ஒருவரின் ஆளுமையையும், எதிர்காலத்தையும் பற்றி தெரிந்து கொள்ளலாம். எண் கணிதத்தின் படி, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பிறந்த தேதிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. பிறந்த தேதியின் அடிப்படையில், ஒருவரின் விதி எண்ணும் கணிக்கப்படுகிறது.
எண் கணிதத்தின் படி அனைத்து மாதத்திலும் 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 2-யை விதி எண்ணாகக் கொண்டுள்ளனர். எண் 2 கொண்டவர்கள் இயல்பாகவே மிகவும் அமைதியானவர்கள். இந்த எண்ணில் பிறந்தவர்கள் உள்ளவர்கள் உடலளவிலும், மனதளவிலும் அழகாக இருக்கிறார்கள். மேலும், அவர்கள் விரைவில் அழகான மனிதர்களால் ஈர்க்கப்படுகிறார்கள். இந்த எண்ணில் பிறந்தவர்களின் சிறப்பு குணங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த எண்ணில் பிறந்தவர்கள் அதிபுத்திசாலிகள்
எண் கணிதத்தின் படி, 2 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் அதீத புத்திக்கூர்மை கொண்டவர்கள். இந்த தேதியில் பிறந்தவர்கள் புத்திசாலித்தனத்தை முதலீடாக வைத்து அதன்மூலம் மிகப்பெரிய வெற்றியை அடைகிறார்கள். அவர்களின் புத்திக்கூர்மைக் காரணமாக, எண் 2-ல் பிறந்தவர்களுக்கு மற்றவர்களை விட அதிக மரியாதை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. பாதகமான சூழ்நிலைகளில் கூட இவர்கள் சிறிதும் கலங்காமல் இருப்பது இவர்களின் மிகப்பெரிய பலமாக இருக்கும்.
செல்வம் சேர்ப்பதில் வல்லவர்கள்
எண் 2-ன் பிறந்தவர்கள் செல்வம் சேர்ப்பதில் வல்லவர்கள். வேலை மட்டுமின்றி வியாபாரத்திலும் அவர்கள் பெரிய வெற்றியை அடைவார்கள் மற்றும் மிகப்பெரிய அளவில் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் இசை, பாடல், கலை போன்ற துறைகளிலும் சிறப்பாக செயல்படும் திறமைக் கொண்டவர்கள்.
எந்த துறையில் சிறந்து விளங்குவார்கள்?
மற்றவர்களிடம் நல்ல மரியாதையைப் பெறுவதாலும், சிறந்த பேச்சாற்றலுடன் இருப்பதாலும் சிறந்த அரசியல்வாதியாகவும், நல்ல ஆசிரியராகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மறுபுறம், படைப்பாற்றலுடன் தொடர்புடைய பணித்துறைகளிலும் அவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
தன்னம்பிக்கை குறைவானவர்களாக இருப்பார்கள்
இந்த அதிர்ஷ்ட எண்ணில் பிறந்தவர்களிடம் இருக்கும் ஒரே சிக்கல் தன்னம்பிக்கைக் குறைவுதான். அவர்களால் விரைவான முடிவுகளை எடுக்க முடியாது, அவர்களால் எதையும் விரைவாகச் சொல்ல முடியாது, அதே நேரத்தில், அவர்களின் இயல்பு காலத்திற்கு ஏற்ப மாறக்கூடியது. சில சமயங்களில் ஆற்றல் குறைபாட்டாலும் அவர்கள் சவால்களை சந்திக்கலாம்.
அதிர்ஷ்டமான நாள்
எண் 2 உள்ளவர்களுக்கு 2, 11, 20 மற்றும் 29 தேதிகள் மிகவும் அதிர்ஷ்டமான நாட்களாக இருக்கும். எதிர்காலத்திற்காக நீங்கள் எந்த பெரிய படியையும் எடுக்க விரும்பினால், இந்த தேதிகள் உங்களுக்கு மிகவும் நல்லதாக என்று கருதப்படுகிறது. பொதுவாக இவர்களுக்கு திங்கள், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்கள் அதிர்ஷ்டமான நாட்களாகும். இந்த நாட்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிப்பதாகக் கருதப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
