Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
நியூமராலஜி படி இந்த 5 தேதிகளில் பிறந்தவர்கள் சொல்ற அறிவுரை எப்பவுமே சரியா இருக்குமாம்...இவங்கள 100% நம்பலாம்!
Numerology: மனிதர்கள் அனைவருமே குறிப்பிட்ட அளவு சமயோசித புத்தியுடனும், புத்திக்கூர்மையுடனும் பிறந்தவர்கள்தான். எனவே அவரவர் வாழ்க்கையை அவர்களே வழிநடத்த முடியும். இருப்பினும், சில மோசமான சந்தர்ப்பங்களில் நம்மை கைப்பிடித்து வழிநடத்த சிலர் இருந்தால் வாழ்க்கை இன்னும் எளிதாக இருக்கும்.
துரதிர்ஷ்டவசமாக, நாம் அனைவருமே வெறுக்கும் ஒரு விஷயம் அறிவுரை. அனைவரின் அறிவுரையும் நல்லதாக இல்லாவிட்டாலும், சிலரின் அறிவுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிலர் உங்களுக்குக் கூறும் அறிவுரைகள் எப்போதும் சரியாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதை நீங்கள் கவனித்து உள்ளீர்களா?

எண் கணிதத்தின் படி, சில எண்களில் பிறந்தவர்கள் மற்றவர்களை விட விதிவிலக்கான நுண்ணறிவு மற்றும் ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் அறிவுரைகள் எப்போதும் பயனுள்ளதாகவும், சரியானதாகவும் இருக்கும். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எண் 6 (அனைத்து மாதத்திலும் 6, 15 மற்றும் 24 தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுகிறார்கள், இவர்களிடையே சுக்கிரனின் தாக்கம் பலமாக இருக்கும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் தங்கள் வளர்ப்பு இயல்பு மற்றும் உள்ளார்ந்த பொறுப்புணர்வுக்காக அறியப்படுகிறார்கள்.
அவர்கள் பெரிய சிக்கல்களை சிறியதாக பார்ப்பதற்கும், இரக்கமுள்ள மற்றும் நடைமுறைக்குரிய வழிகாட்டுதலை வழங்குவதற்கும் குறிப்பிடத்தக்க திறனைக் கொண்டுள்ளனர். அவர்களின் அறிவுரைகள் பெரும்பாலும் உண்மையான அக்கறை மற்றும் மனித உணர்வுகளின் ஆழமான புரிதலிலிருந்து உருவாகிறது. அவர்களின் அறிவுரைகள் எப்போதும் மற்றவர்களின் நன்மைக்காக கூறப்படுவதுதான்.
எண் 5 (அனைத்து மாதத்திலும் 5,14 மற்றும் 23 தேதிகளில் பிறந்தவர்கள்)
புதனால் ஆளப்படும், எண் 5 ஆர்வம் மற்றும் சிறந்த கம்யூனிகேஷனுடன் தொடர்புடையது. 5, 14 மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள், ஒரே விஷயத்தை பல கோணங்களில் ஆராய்ந்து பார்க்கும் திறன் கொண்ட இயற்கையான தொடர்பாளர்கள்.
அவர்களின் ஆலோசனைகள் பெரும்பாலும் நுண்ணறிவு மற்றும் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் இருக்கும், புதிய கோணங்களையும் யோசனைகளையும் கவனிக்க உங்களை ஊக்குவிக்கிறது. சிக்கலான சிக்கல்களை எளிதாக்கும் தனித்துவமான திறனை அவர்கள் கொண்டுள்ளனர், அவர்களின் அறிவுரைகள் எப்போதும் மற்றவர்களுக்கு விலைமதிப்பற்றதாக இருக்கும்.
11 மற்றும் 29
எண் 11 மற்றும் 29 ஆகியவை எண் கணிதத்தில் முதன்மை எண்களாகும், இந்த எண்கள் ஆன்மீக விழிப்புணர்வின் உயர் மட்டத்தைக் குறிக்கிறது. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பெரும்பாலும் வாழ்க்கையின் ஆழமான அர்த்தங்களைப் பற்றிய ஆழமான நுண்ணறிவு கொண்ட தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள். அவர்களின் அறிவுரைகள் எப்போதும் மற்றவர்களின் நன்மைகளை சார்ந்ததாக இருக்கும். அவர்களின் அறிவுரைகள் உள்ளுணர்வு, தெளிவு மற்றும் ஞானத்துடன் சிக்கல்களை எதிர்கொள்ள உதவுகிறது.
எண் 3 (அனைத்து மாதத்திலும் 3,12, 21 மற்றும் 30 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)
3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் முன்னேற்றம் மற்றும் புத்திக்கூர்மையின் கிரகமான வியாழனால் ஆளப்படுகிறார்கள். அவர்கள் இயற்கையாகவே ஆக்கப்பூர்வமாகவும் நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள், மற்றவர்கள் கவனிக்காத விஷயங்களை துல்லியமாக கணிக்கும் திறமையைக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் அறிவுரைகள் பெரும்பாலும் உற்சாகம் மற்றும் நேர்மறை ஆற்றலால் நிரம்பியுள்ளன, புதிய வாய்ப்புகளை ஆராயவும், உங்கள் ஆக்கப்பூர்வமான திறமையைக் கண்டறியவும் உங்களை ஊக்குவிக்கிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

