Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
நியூமராலஜி படி இந்த 4 தேதிகளில் பிறந்த குழந்தைகள் அவங்க பெற்றோரை பெருமைப்படுத்துபவர்களாக இருப்பார்களாம்...!
Numerology: ஒவ்வொரு குழந்தையும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்கள் மற்றும் திறமையானவர்கள். ஆனால் நியூமராலஜி படி குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் பெரும்பாலும் கூடுதல் திறமைசாலிகளாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, குறிப்பிட்ட நாட்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தனித்துவமான திறமைகள், இயற்கையான வசீகரம் அல்லது மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்கும் குணம் ஆகியவற்றை வரமாக பெற்றவர்களாக இருக்கலாம்.

நீங்கள் பெற்றோராக இருந்தால் உங்கள் குழந்தையின் பிறந்த நாட்கள் அவர்களுக்காக என்ன வைத்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கலாம். இந்த பதிவில் எந்த தேதிகளில் பிறந்த குழந்தைகள் வாழ்க்கையில் மகத்துவத்தை அடைவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
1, 10, 19 அல்லது 28 ஆகிய தேதிகளில் பிறந்த குழந்தைகள்
அனைத்து மாதத்திலும் 1, 10, 19 அல்லது 28 ஆகிய தேதிகளில் பிறந்த குழந்தைகள் வலுவான தலைமைத்துவ குணங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. சூரியனால் ஆளப்படும் இவர்கள் சிறு வயதிலிருந்தே பிரகாசமானவர்களாக இருக்கிறார்கள், பெரிய முயற்சி இல்லாமலேயே அவர்கள் கவனத்தையும், மரியாதையையும் பெறுகிறார்கள். அவர்கள் இயற்கையாகவே தலைமை குணத்துடன் பிறந்தவர்கள், எதிர்காலத்தில் அவர்கள் எந்த துறையில் வேலை செய்தாலும் அவர்கள் அதில் சிறந்து விளங்குவார்கள்.
5, 14 அல்லது 23 தேதிகளில் பிறந்த குழந்தைகள்
உங்கள் குழந்தைகள் இந்த தேதிகளில் பிறந்திருந்தால் நீங்கள் ஒரு மேதையை பெற்றுள்ளீர்கள். இந்த தேதிகளில் பிறந்த குழந்தைகள் தகவல் தொடர்பு மற்றும் அறிவாற்றல் கிரகமான புதன் கிரகத்தால் ஆளப்படுகிறார்கள்.
இந்ததேதிகளில் பிறந்த பிறந்த குழந்தைகள் விரைவான புத்திசாலித்தனத்தையும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கான திறனையும் கொண்டுள்ளனர். அவர்கள் எழுத்து, கலை அல்லது தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஆரம்பகாலத்திலேயே ஆர்வம் காட்டலாம். அவர்களின் முடிவில்லா ஆர்வம் மற்றும் புத்திசாலித்தனமான யோசனைகள் மூலம் அவர்கள் உயர்ந்த நிலையை அடைவார்கள்.
7, 16 அல்லது 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஆழமான ஆன்மீகம் மற்றும் உள்ளுணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். நெப்டியூனால் ஆளப்படும், இந்த குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய ஆழமான புரிதலை வெளிப்படுத்துவார்கள், அதை எப்படி வெளிப்படுத்துவது என்று அவர்களுக்குத் தெரியாவிட்டாலும் கூட அவர்கள் அதற்கு முயற்சிப்பார்கள்.
அவர்கள் கனவு காண்பவர்களாக இருக்கலாம், எப்போதும் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள தயாராக இருப்பார்கள். அவர்களின் அமைதியான மற்றும் சிந்தனைமிக்க இயல்பு அவர்களின் வயதுக்கு அப்பாற்பட்ட புத்திசாலிகளாக அவர்களை உருவாக்குகிறது.
9, 18 அல்லது 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் அன்பு மற்றும் நீதியின் போர்வீரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த குழந்தைகள் சிறுவயதிலிருந்தே தமக்காகவும் மற்றவர்களுக்காகவும் நிற்பதுடன், சரி மற்றும் தவறு பற்றிய சரியான உணர்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் உலகத்தை சிறந்த இடமாக மாற்றும் விருப்பத்துடன் வளர்கிறார்கள். அவர்கள் எங்கு சென்றாலும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்குவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
