இந்த 5 தேதிகளில் பிறந்த பெண்கள் அவங்க கணவருக்கு அதிர்ஷ்ட தேவதைகளாம்.. கூறும் எண் கணித நிபுணர்..

எண்கள் நமது வாழ்க்கையில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் ஒருவர் பிறந்த தேதி அந்நபரின் குணாதிசயங்கள், எதிர்காலம், பலம், பலவீனம் போன்ற பலவற்றை வெளிப்படுத்தும் என்பது தெரியுமா? இப்படிப்பட்ட எண்களை அடிப்படையாக கொண்டது தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த எண்களானது ஒருவரது பிறந்த தேதியின் கூட்டுத் தொகையின் ஒற்றை இலக்க எண்களாகும். அதாவது 25 ஆம் தேதி ஒருவர் பிறந்திருந்தால், அந்நபருக்குரிய எண் 2+5 = 7 ஆகும்.

இப்படிப்பட்ட எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த பெண்கள் அவர்களது கணவருக்கு அதிர்ஷ்ட தேவதைகளாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தேதிகளில் பிறந்த பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் தங்கள் தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவதோடு, நிதி வளர்ச்சியையும், நல்ல செழிப்பான வாழ்க்கையையும் வாழ்வதாக கூறப்படுகிறது.

Numerologist Says Women Born On These 5 Dates Are Lucky Charm For Their Husband

இதுக்குறித்து எண் கணித நிபுணரான ஸ்வேதா சுரேகா தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்ட 5 தேதிகளில் பிறந்த பெண்கள் கணவருக்கு அதிர்ஷ்ட தேவதைகளாக இருப்பார்கள் என்றும், அந்த பெண்களை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள் என்றும் கூறியுள்ளார். அது எந்த தேதி பெண்கள் என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

பிறந்த தேதி 1

இந்த தேதியில் பிறந்த பெண்கள் இயற்கையான தலைவர்கள், லட்சியம் மிகுந்தவர்கள் மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்கள். இந்த பெண்கள் ஒரு ஆணின் வாழ்க்கையில் நுழையும் போது, அந்த ஆண் தொழில் வளர்ச்சி, அங்கீகாரம், சமூக அந்தஸ்து ஆகியவற்றை கொண்டு வரும். மேலும் இந்த தேதி பெண்கள் தங்கள் கணவர்களை தைரியமாக எதையும் எடுத்து செய்ய ஊக்குவித்து, வெற்றி அடைய வைப்பார்கள்.

பிறந்த தேதி 5

இந்த தேதியில் பிறந்த பெண்கள் துடிப்பானவர்கள், வலுவான தகவல் தொடர்பு திறன்களைக் கொண்டவர்கள். திருமணத்திற்கு பின் இவர்கள் தங்கள் கணவருக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள், நிதி ஸ்திரத்தன்மை மற்றும் துடிப்பான சமூக வாழ்க்கையைத் தருவார்கள். முக்கியமாக இந்த தேதியில் பிறந்த பெண்கள் தங்கள் கணவரை வணிகத்தில் செழித்து வளர உதவுவார்கள்.

பிறந்த தேதி 28

இந்த தேதியில் பிறந்த பெண்கள் மிகுந்த லட்சியத்தைக் கொண்டவர்கள். இந்த பெண்கள் ஒரு ஆணின் வாழ்க்கையில் நுழையும் போது, அவர்கள் தனது கணவரையும் ஒரு லட்சியவாதியாக மாற்றி, தொழிலில் செழித்து வளர உதவுவார்கள். மேலும் இந்த பெண்கள் தங்கள் கணவருக்கு தலைமைத்துவ வாய்ப்புகளையும், நிதி வெற்றியையும் ஈர்க்கிறார்கள்.

பிறந்த தேதி 29

இந்த தேதியில் பிறந்த பெண்கள் நல்ல ராஜதந்திரம், உணர்ச்சி ரீதியான உள்ளுணர்வு கொண்டவர்கள். திருமணத்தில் இவர்கள் நல்லிணக்கம் மற்றும் உணர்ச்சி சமநிலையை கொண்டு வருவார்கள். மேலும் இவர்கள் கணவர்கள் ஆதரிக்கப்படுவதாகவும் நேசிக்கப்படுவதாகவும் உணர வைக்கிறார்கள். அதோடு இவர்கள் தங்கள் கணவரை உள்ளுணர்வு மற்றும் பொறுமையுடன் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க உதவுகிறார்கள்.

பிறந்த தேதி 15

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அழகாக இருப்பது மட்டுமின்றி, தங்கள் கணவருக்கு உணர்ச்சி மகிழ்ச்சியை மட்டுமல்ல, நிதி செழிப்பையும் தருகிறார்கள். இந்த பெண்கள் தங்கள் கணவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதாக அறியப்படுகிறார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள 5 தேதிகளில் பிறந்த பெண்கள் எந்த வீட்டில் உள்ளார்களோ, அப்பெண்கள் பிறந்ததும் அந்த வீட்டின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். மேலும் இந்த தேதியில் பிறந்த பெண்கள் ஒரு ஆணின் வாழ்க்கையில் நுழையும் போது, அந்த ஆணின் அதிர்ஷ்ட கதவு திறக்கும் என்றும் எண் கணித நிபுணர் கூறியுள்ளார்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion