Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
November 2025 Horoscope: நவம்பரில் இந்த 5 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் தீர்ந்து, அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது!
November 2025 Planet Transits: 2025 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் நுழையவுள்ளோம். ஜோதிடத்தின் படி, நவம்பர் மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றம் ஏற்படவுள்ளன. முக்கியமாக இந்த மாதத்தில் தான் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார்.
அதே சமயம் சூரியன், சுக்கிரன், புதன் மற்றும் குரு போன்ற கிரகங்களின் நிலைகளிலும் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இப்படி பல முக்கிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் தெரியும்.

அதுவும் நவம்பர் முதல் வாரத்தில் நவம்பர் 02 ஆம் தேதி சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்லவுள்ளார். அதன் பின் நவம்பர் 16 ஆம் தேதி சூரியன் விருச்சிக ர சிக்கு செல்கிறார். அடுத்து நவம்பர் 10 ஆம் தேதி புதன் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். அதைத் தொடர்ந்து நவம்பர் 11 ஆம் தேதி குரு வக்ரமாகவுள்ளார். பின் மீன ராசியில் வக்ரமாக இருக்கும் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார்.
நவம்பர் 26 ஆம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். இப்படியான கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்வில் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
நவம்பர் மாதத்தில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால் கும்ப ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறவுள்ளனர். மேலும் இந்த ராசிக்காரர்கள் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். இந்த மாதம் ஒரு பொற்காலமாக இருக்கும். பணிபுரிபவர்கள் சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் பல மாற்றங்களை ஏற்படுத்தும். நிதி நிலை மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் ஒரு நல்ல உயர்வைக் காண்பீர்கள். இம்மாதத்தில் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனைகள் நல்ல லாபத்தை தரும். வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன. பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும். உயர் அதிகாரிகளின் உங்களின் திறமையை பாராட்டுவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதமானது சாதகமானதாக இருக்கும். வியாபாரிகளுக்கு இம்மாதம் மிகவும் சிறந்ததாக இருக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒவ்வொரு வேலையும் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனை வெளிக்காட்டுவீர்கள். இதனால் இம்மாதத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் பல முக்கியமான வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வணிகர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். மொத்தத்தில் நவம்பர் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அள்ளித் தரும் மாதமாக இருக்கும்.
துலாம்
நவம்பர் மாதத்தில் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்களினால் துலாம் ராசிக்காரர்கள் எதிர்பாராத பல நல்ல நன்மைகளைப் பெறுவார்கள். மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவார்கள். பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஆரோக்கியம் குறித்த கவலைகள் நீங்கும். உடல்நலம் மேம்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் எதிர்பாராத அளவில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். வருமானத்திலும் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் ஏற்படும் கிரக பெயர்ச்சிகளால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவீர்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலை செய்பவர்களுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சனி பகவானின் அருளால் நிதி பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications