உங்களோட பிறந்த தேதியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...

November 2025 Monthly Numerology Predictions In Tamil: ஒருவரது எதிர்காலத்தை கணிக்கும் சக்தி எண்களுக்கு உள்ளதாக ஒரு நம்பிக்கை உள்ளது. எண்களைக் கொண்டு கணித்து கூறப்படும் ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தில், ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நபரின் எதிர்காலம், குணாதிசயங்கள், பலம், பலவீனம் போன்ற பல விஷயங்களை அறியலாம்.

2025 ஆம் ஆண்டின் பதினொன்றாவது மாதமான நவம்பர் மாதம் உங்கள் பிறந்த தேதிப்படி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே, எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதிப்படி 2025 நவம்பர் மாதம் எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

November 2025 Monthly Numerology Predictions In Tamil

எண் 1

1, 10, 19 அல்லது 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நவம்பர் மாதம் ஆற்றல், அங்கீகாரம் மற்றும் புதிய வாய்ப்புகளின் மாதமாக இருக்கும். நீங்கள் உங்களை நம்பினால் மற்றும் எந்த சூழ்நிலையிலும் உறுதியுடன் இருந்தால் மட்டுமே அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். ஊடகம், வடிவமைப்பு, எழுத்து, இசை, கல்வி அல்லது மார்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் பாராட்டைப் பெறுவார்கள். வேலை மாற்றம் அல்லது பதவி உயர்வுக்காக காத்திருந்தால், மாத இறுதி சாதகமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமான தம்பதிகள் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும். நிதி விஷயங்களில் ஸ்திரத்தன்மையையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். சில நேரங்களில் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும். இம்மாதம் போதுமான தூக்கம் பெறுவது மிகவும் முக்கியம்.

எண் 2

2, 11, 20 அல்லது 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. நவம்பர் மாதம் தொழில் ரீதியாக கலவையான பலன்கள் கிடைக்கும். முதல் பாதி மனம் கொஞ்சம் நிலையற்றதாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இந்த மாதம், உங்கள் இதயம் மற்றும் மனம் இரண்டையும் கேட்டு நடக்க வேண்டும். வருமானம் நிலையானதாக இருக்கும், ஆனால் செலவுகள் அதிகரிக்கலாம். புதிய முதலீடுகளைச் செய்வதற்கு முன் நன்கு யோசிக்க வேண்டும். சிக்கிய பணம் கைக்கு கிடைக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தூக்கமின்மை அல்லது மன சோர்வை சந்திக்க நேரிடும்.

எண் 3

3, 12, 21 அல்லது 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இம்மாதத்தில் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். முதல் பதினைந்து நாட்களில் சில தடைகள் அல்லது பின்னடைவுகள் ஏற்படலாம், ஆனால் இரண்டாவது வாரத்தில், உங்கள் கடின உழைப்பின் மூலம் விஷயங்களை மாற்றுவார்கள். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், அவற்றை விவாதத்தின் மூலம் தீர்க்க முயற்சிக்க வேண்டும். மாத தொடக்கத்தில் சேமிப்பில் கவனம் செலுத்துவது முக்கியம். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குருவின் செல்வாக்கு உங்களுக்கு மன வலிமையைத் தரும். இருப்பினும், சோர்வு மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் எழலாம்.

எண் 4

4, 13, 22 அல்லது 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நவம்பர் மாதம் சோதனை நிறைந்ததாக இருக்கும். மாதத்தின் முதல் பாதி சவால்கள் நிறைந்ததாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய உறவில் நுழையும் முன் கவனமாக சிந்தியுங்கள். நிதி ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மையைத் தவிர்க்க வேண்டும்.

எண் 5

5, 14 அல்லது 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திட்டமிட்டு எந்த வேலையையும் செய்ய வேண்டும். அவசரமாக எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் சண்டைகள் ஏற்படலாம். நிதி ரீதியாக நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். பட்ஜெட் போட்டு எந்த செலவுகளையும் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் மாதத்தின் இரண்டாம் பாதியில் செல்வம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு மற்றும் தொண்டை பிரச்சினைகள் ஏற்படலாம்.

எண் 6

6, 15 அல்லது 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு மாதத்தின் தொடக்கம் சற்று மெதுவாக இருக்கும். ஆனால் போக போக வேலையில் நல்ல முன்னேற்றத்துடன், புதிய வாய்ப்புக்களும் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கை சற்று இனிமையாக இருக்கும். குடும்பத்தில் நல்லிணக்கமும் அன்பும் மேலோங்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தொண்டை மற்றும் தோல் பிரச்சினைகளைத் தவிர்க்க, நிறைய தண்ணீர் குடிக்கவும் மற்றும் இரவில் தாமதமாக விழித்திருப்பதைத் தவிர்க்கவும்.

எண் 7

7, 16 அல்லது 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் முன்னேற்றத்தைத் தரும் மாதமாக இருக்கும். சில முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய முயற்சிகளில் கவனமாக இருக்க வேண்டும். ஆராய்ச்சி, ஆன்மீகம், எழுத்து அல்லது ஐடி துறையில் உள்ளவர்கள் பயனடைவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, அன்புக்குரியவர்களுடன் வெளிப்படையாகப் பேசுவது உறவுகளை மேம்படுத்தும். நிதி ரீதியாக இம்மாதம் நன்றாக இருக்கும். இருப்பினும் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். பழைய வேலைகளிலிருந்து லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தம் அல்லது தலைவலி உங்களைத் தொந்தரவு செய்யும்.

எண் 8

8, 17 அல்லது 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு மாதத்தின் முதல் பாதி தொழில் ரீதியாக பல தடைகளை சந்திக்க நேரிடும். அரசாங்க வேலை, நிர்வாக விஷயங்களில் அல்லது ஒப்பந்தங்களில் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை நன்கு சிந்தித்து செய்யுங்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை குடும்பத்தினருடனோ அல்லது வாழ்க்கைத் துணையுடனோ கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். மாதத்தின் முதல் பாதியில் தேவையற்ற செலவுகள் அல்லது தாமதங்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சோர்வு மற்றும் எலும்பு வலியை சந்திக்கலாம்.

எண் 9

9, 18 அல்லது 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நவம்பர் மாதத்தில் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். குழுப்பணி மற்றும் தலைமைத்துவம் இரண்டிலும் உங்கள் செல்வாக்கு தெரியும். தனிப்பட்ட வாழ்க்கை மேம்படும். இம்மாதத்தில் கோபம் அல்லது பொறுமையின்மையைத் தவிர்க்க வேண்டும். பொறுமையுடன் இருந்தால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். நிதி நிலைமை படிப்படியாக வலுவடையும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். கூட்டு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் கோபம் இரத்த அழுத்தம் அல்லது ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். அமைதியாக இருப்பது முக்கியம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, November 2, 2025, 18:40 [IST]
Desktop Bottom Promotion