Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
நவம்பர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசியும் இதுல இருக்கா?
November 2024 Lucky Zodiac Signs In Tamil: 2024 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். இன்னும் ஒருசில நாட்களில் நவம்பர் மாதத்தில் நுழையவுள்ளோம். ஜோதிடத்தின் படி, நவம்பர் மாதம் மிகவும் சிறப்பானது. ஏனெனில் இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதோடு, பல சுப மற்றும் ராஜயோகங்களும் உருவாகவுள்ளன. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
முக்கியமாக நவம்பர் மாதத்தில் வக்ர நிலையில் இருக்கும் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார். மேலும் சுக்கிரன் தனுசு ராசிக்கும், சூரியன் விருச்சிக ராசிக்கும் செல்வதோடு, புதன் வக்ர நிலையில் விருச்சிக ராசியிலும் பயணிக்கவுள்ளார். இப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் சச ராஜயோகம், நீச்சபங்க ராஜயோகம், நவபஞ்ச ராஜயோகம், தனலட்சுமி ராஜயோகம், லட்சுமி நாராயண ராஜயோகம், புதாதித்ய ராஜயோகம் போன்ற மங்களகரமான ராஜயோகங்கள் உருவாகவுள்ளன.

இது தவிர மகாலட்சுமி ராஜயோகம், கஜகேசரி ராஜயோகங்களும் உருவாகவுள்ளன. இவ்வளவு ராஜயோகங்கள் ஒரே மாதத்தில் உருவாவதால், நவம்பர் மாதம் சில ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமாக, முன்னேற்றத்தைத் தரக்கூடியதாக இருக்கப் போகிறது. இப்போது 2024 நவம்பர் மாதம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதமானது மிகவும் அற்புதமாக இருக்கும். அதுவும் தொழிலில் பலவிதமான நன்மைகளைப் பெறுவீர்கள். பணியிடத்தில் இலக்குகளை அடைய கடினமாக உழைப்பீர்கள். இந்த கடின உழைப்புக்கான பலனும் இம்மாதத்தில் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழிலைத் தொடங்கும் எண்ணம் இருந்தால், இம்மாதம் அதற்கு சாதகமாக இருக்கும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். மாணவர்களுக்கு இம்மாதம் சிறப்பானதாக இருக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பினாலோ அல்லது வேலை செய்ய விரும்பினாலோ, அதற்கான வாய்ப்பு கிடைக்கும். காதல் திருமணம் நடக்கவும் வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதமானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறுவீர்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், இம்மாதத்தில் முடிவுக்கு வரும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுவீர்கள். காலநிலை மாற்றத்தால் சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் சிறப்பாக இருக்கும். இம்மாதத்தில் வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில், நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் இம்மாதத்தில் முடிவுக்கு வரும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குரு மற்றும் சனி பகவானின் அருளால் இம்மாதத்தில் இருந்து வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் ரொம்பவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். முக்கியமாக பணிபுரிபவர்கள் இம்மாதத்தில் பல நன்மைகளைப் பெறுவார்கள். வேலை தொடர்பாக வெளியூர் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். இம்மாதத்தில் செலவுகள் சற்று அதிகரித்தாலும், பண வரவு சிறப்பாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தை இம்மாதத்தில் காணலாம். தொழிலில் கொடிகட்டி பறப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications