Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
நவராத்திரியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு இதெல்லாம் கட்டாயம் நடந்தே தீரும்.. என்னன்னு பாருங்க..
Navratri 2025 Horoscope: 2025 ஆம் ஆண்டின் நவராத்திரி வரப்போகிறது. நவராத்திரி என்பது தீமையை எதிர்த்து நன்மையின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் கொண்டாடப்படுகிறது. அதாவது மகிஷாசுரனைத் துர்கா தேவி வதம் செய்த நிகழ்வின் நினைவாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
இந்த நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்கையின் 9 வடிவங்களும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபடப்படுகின்றன. இந்த ஆண்டு நவராத்திரி செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 01 ஆயுத பூஜை மற்றும் அக்டோபர் 02 விஜய தசமியில் முடிவடைகிறது.

இந்த ஆண்டின் நவராத்திரியில் துர்கா தேவியின் எல்லையற்ற ஆசீர்வாதங்களை 3 ராசிக்காரர்கள் பெறவுள்ளதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். மேலும் துர்கையின் அருளால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படப் போவதாகவும் கூறப்படுகிறது. இப்போது 2025 ஆம் ஆண்டின் நவராத்திரி எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் நவராத்திரி காலத்தில் துர்கையின் பரிபூர்ண ஆசியை பெறுவார்கள். இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட காலமாக நிலுவையில் இந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அதோடு, நீண்ட கால ஆசைகளும் நிறைவேறும். மேலும் பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும் வாய்ப்புள்ளது. சிக்கிய பணம் கைக்கு கிடைக்கலாம். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். அதோடு தேவியின் அருளால் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் தேடி வரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் நவராத்திரியில் துர்கையின் அருளால் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு துர்கை அம்மன் மீதான பற்று அதிகரிக்கும். துர்கையை வழிபாடு செய்வதன் மூலம், வாழ்க்கையில் அனைத்து விதமான மகிழ்ச்சியையும் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு வெளிநாட்டுடன் தொடர்புடைய நல்ல ஒப்பந்தம் கிடைக்கும். இதன் மூலம் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு நவராத்திரி மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. துர்கா தேவியின் அருளால் இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி ரீதியாக பல வழிகளில் இருந்து பணம் வந்து குவியும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மேலும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். மொத்தத்தில் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் விலகி, சந்தோஷம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
