அக்டோபர் 16-ல் நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது!

Navpancham Rajyog On 16 October 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றங்கள் மட்டுமின்றி, அவற்றின் நிலைகள் மற்றும் பார்வைகளும் மனித வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் சக்தி வாய்ந்த இரண்டு கிரகங்கள் தங்களின் நிலைகளால் ஒரு சக்தி வாய்ந்த ராஜயோகம் உருவாகியுள்ளன. அதுவும் நீதிமான் சனி பகவான் மற்றும் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் ஆகியவற்றின் நிலையால் நவபஞ்சம ராஜயோகம் உருவாகியுள்ளது.

Navpancham Rajyog On 16 October 2026 List Of Lucky Zodiac Signs

பஞ்சாங்கத்தின் படி, இந்த நவபஞ்சம ராஜயோகமானது அக்டோபர் 16 ஆம் தேதியில் முழு பலனைத் தரவுள்ளது. ஏனெனில் இந்நாளில் சனி மற்றும் செவ்வாய் சரியாக 120 டிகிரி கோணத்தில் இருக்கும். இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறது. இப்போது சனி, செவ்வாயால் உருவாகியுள்ள நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்

சனி, செவ்வாயால் உருவாகியுள்ள நவபஞ்சம ராஜயோகத்தால் கடக ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதகமாக இருக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் ஆற்றலும், தன்னம்பிக்கையும் நிறைந்து இருப்பார்கள். முக்கியமான முடிவுகளை திறம்பட எடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி ரீதியாகவும் சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

கன்னி

சனி, செவ்வாயால் உருவாகியுள்ள நவபஞ்சம ராஜயோகத்தால் கன்னி ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி ரீதியாக நல்ல செய்திகளைப் பெறுவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வழங்கப்டலாம். அதுவும் புதிய தொழிலை தொடங்க நினைத்தாலோ அல்லது முதலீடுகளை செய்ய நினைத்தாலோ, இக்காலத்தில் முயற்சித்தால் சாதகமான பலனைப் பெறலாம். முக்கியமாக பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, அதன் மூலம் நல்ல நிதி ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

கும்பம்

சனி, செவ்வாயால் உருவாகியுள்ள நவபஞ்சம ராஜயோகத்தால் கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்ட கதவு திறக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்தி நிறைய பணத்தை சேமிக்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, October 8, 2026, 23:16 [IST]
Desktop Bottom Promotion