Latest Updates
-
ஊறுகாய் மற்றும் கருவாட்டை அதிகம் சாப்பிடுவது வயிற்றுப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா? விளக்கும் டாக்டர்! -
சனி பகவான் ஆசியால் அடுத்த 100 நாட்களில் இந்த 5 ராசிக்காரங்க அசுர வளர்ச்சியை காண்பார்களாம்! -
எப்பவும் சிக்கனை ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருவாட்டி இப்படி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
நவம்பர் 01, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - இல்லனா ஆபத்துதான் -
செவ்வாய் சிம்ம ராசிக்குள் செல்வதால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கிலோ சிக்கன் வாங்குனா இந்த மாதிரி மங்களூர் ஸ்டைல் சிக்கன் சுக்கா செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
வாஸ்து படி உங்கள் வீட்டில் உள்ள சின்ன சின்ன தவறுகள் உங்களுக்கு ராகுவின் சாபத்தை பெற்றுத்தருமாம் - ஜாக்கிரதை -
இந்தியாவின் இந்த கிராமத்தில் திருமணம் என்ற உறவே கிடையாதாம் - லிவ்-இன் உறவு மட்டும்தானாம்- எங்க தெரியுமா? -
4 முட்டை இருந்தா இந்த மாதிரி மைசூர் ஸ்டைலில் முட்டை குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
வார ராசிபலன் (01 November 2026-07 November 2026)- இந்த வாரம் உங்க ராசி எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
இந்த 3 ராசி ஆண்கள் அனைத்து விஷயத்திற்கும் வெட்கப்படுபவர்களாக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசியும் தனித்துவமான குணாதிசயங்களின் கலவையைக் கொண்டுள்ளது. பெரும்பாலான நபர்கள் தங்களுக்குள் இருப்பதாக ஒப்புக்கொள்ள மறுக்கும் ஒரு குணம் கூச்சம். கூச்சம் என்பது அமைதியான மனநிலையிலிருந்து, வெளிப்படையாக பேசாமல் இருப்பது மற்றும் கவனத்தை ஈர்க்கத் தயங்குவது வரை வெவ்வேறு வழிகளில் வெளிப்படும்.
அவர்களிடம் எவ்வளவு திறமைகள் இருந்தாலும் அவர்களின் கூச்ச சுபாவத்தால் அதை வெளிப்படுத்த மாட்டார்கள். எந்தவொரு வாய்ப்பையும் அவர்கள் தேடிச்செல்ல மாட்டார்கள், தேடிவரும் வாய்ப்பை ஏற்றுக்கொள்ளவும் தயக்கம் காட்டுவார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசி ஆண்கள் கூச்ச சுபாவம் உள்ளவர்களாக இருப்பார்கள் மற்றும் அவர்களின் கூச்சத்திற்குப் பின்னால் உள்ள காரணங்கள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள். மிகவும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே, தங்களை நோக்கி கவனத்தை ஈர்க்க அவர்கள் முயலுவார்கள். அவர்கள் திரைக்குப் பின்னால் வேலை செய்வதிலேயே திருப்தி அடைகிறார்கள், பெரும்பாலும் மற்றவர்களின் அங்கீகாரத்தை விட சிறப்பாகச் செய்யப்பட்ட வேலையின் திருப்தியை விரும்புகிறார்கள்.
கன்னி ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு, குறிப்பாக அறிமுகமில்லாத சூழல்களில், வெளிப்படையாக இருப்பதை மிகவும் சவாலாகக் கருதுகிறார்கள். அவர்கள் தங்கள் சுற்றுப்புறத்துடனும், அவர்களுடன் இருக்கும் மக்களுடனும் நிம்மதியாக உணரும் வரை, ஒதுக்கப்பட்டவர்களாகவும், மற்றவர்களிடமிருந்து விலகி இருப்பவர்களாகவும் இருப்பார்கள்.
கடகம்
கடக ராசி ஆண்களின் கூச்சம் ஆழமான பாதுகாப்பின்மை உணர்வுகளில் வேரூன்றியுள்ளது. இந்த ராசிக்காரர்கள் தங்களை சிறந்தவர்களாக உணருவதற்கு அதிக முயற்சி செய்கிறார்கள், ஆனால் அவர்கள் பெரும்பாலும் தங்கள் மனத்தடைகளை அகற்ற போராடுகிறார்கள்.
காதல் விஷயமாக இருந்தாலும் சரி அல்லது வேலை தொடர்பான விஷயங்களாக இருந்தாலும் சரி, எந்தவொரு விஷயத்தையும் முன்னெடுக்க அஞ்சுபவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். இந்த கூச்சம் அவர்களின் சந்தேக குணத்தால் அதிகரிக்கிறது, மேலும் மற்றவகர்களை நம்புவதை கடினமாக்குகிறது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே அதிகமாக நேசிப்பதற்கு பெயர் பெற்றவர்கள், இது அவர்களை கூச்ச சுபாவமுள்ளவர்களாக மாற்றுகிறது. அவர்கள் பிரபலத்தைத் தேடுவதில்லை அல்லது தேவையற்ற கவனத்தை ஈர்க்க முயற்சிப்பதில்லை. இது அவர்களின் பலவீனத்தின் அறிகுறி அல்ல, மாறாக அவர்களின் சுதந்திரம் மீதான விருப்பம்.
இந்தப் பண்பு அவர்களின் வலுவான பணி நெறிமுறையுடன் ஒத்துப்போகிறது என்றாலும், தேவைப்படும்போது தங்கள் மனதில் உள்ளதைப் பேசுவது அவர்களுக்கு சவாலாக இருக்கலாம். இது அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் பின்னடைவுகளை ஏற்படுத்தலாம்.பதவி உயர்வுகள் அல்லது சம்பள உயர்வுகள் பற்றி விவாதிக்க வேண்டிய நேரம் வரும்போது அவர்கள் தங்கள் சாதனைகளை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டலாம் அல்லது வெட்கப்படலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

