Latest Updates
-
தீபாவளியில் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வருமானம் இரட்டிப்பாகும்! உங்க ராசி இதுல இருக்கா? -
Diwali 2026 Horoscope: இந்த தீபாவளியில் ராஜயோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Hair Care: கருகருனு நீளமான முடி வேணுமா? அப்ப தயிரை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
பட்டுப்போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்ப இந்த லிப் மாஸ்க்கை தினமும் நைட் போடுங்க.. -
தீபாவளிக்கு பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வெண்டக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பச்சடி செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் 'வெங்காய தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
Dhanteras 2026: தந்தேராஸ் நாளில் குறைந்த பட்ஜெட்டில் மகாலட்சுமியின் அருளைப் பெற வாங்க வேண்டிய 5 பொருட்கள்! -
வாஸ்து படி உங்களோட தங்க நகைகளை வீட்டின் திசையில் மட்டும் வைக்காதீங்க - இல்லனா அவ்வளவுதான் -
தீபாவளிக்கு பின் வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியும்!
இந்த 4 ராசிக்காரங்க சகுனி மாதிரி ரொம்ப தந்திரமானவர்களா இருப்பார்களாம்... இவங்கள எப்பவும் நம்பிராதீங்க...!
பல நூற்றாண்டுகளாக ஜோதிடம் மனித நாகரிகத்தின் ஒரு அங்கமாக ஜோதிடம் இருந்து வருகிறது. இது கிரக நிலைகள் மற்றும் மனித வாழ்வில் அவற்றின் தாக்கம் பற்றிய கணிப்புகளை உள்ளடக்கியதாகும். ஜோதிடத்தில் ராசிகள் இன்றியமையாத பகுதியாகும். மேலும், அவை வெவ்வேறு ஆளுமைப் பண்புகளையும், குணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
சில ராசிக்காரர்கள் சகுனி போல தந்திரமானவர்களாக இருப்பார்கள், அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதனை மற்றவர்களை மூளைச்சலவை செய்து அவர்கள் செய்ய வைத்து தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். தந்திரமான ராசிக்காரர்கள் தாங்கள் விரும்புவதைப் பெற மற்றவர்களைக் கையாளும் திறமையைக் கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் இலக்குகளை அடைய முகஸ்துதி, வற்புறுத்தல் அல்லது ஏமாற்றுதலைப் பயன்படுத்தலாம்.

இவர்கள் தங்கள் உண்மையான நோக்கத்தையும், உண்மையான குணத்தையும் ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டார்கள். தங்கள் நோக்கங்களை அடைய எது தேவையோ அதனை மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தான தந்திரக்காரர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம்
ஜோதிடத்தில் மிகவும் தந்திரமான ராசிகளில் முதலிடத்தில் இருப்பது விருச்சிகம். விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களின் மர்மமான மற்றும் இரகசிய இயல்புக்காக அறியப்படுகிறார்கள். எனவே, இது பெரும்பாலும் மக்கள் அவர்களை தவறாக புரிந்து கொள்ள வழிவகுக்கிறது. அவர்கள் தங்கள் உண்மையான எண்ணங்களையும் உணர்வுகளையும் மறைப்பதிலும் சிறந்தவர்கள்.
விருச்சிக ராசிக்காரர்கள் சக்திவாய்ந்த உள்ளுணர்வு கொண்டவர்கள் மற்றும் மக்களின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் எளிதில் படிக்க முடியும், அவர்கள் மற்றவர்களைக் கையாள விரும்பும் சூழ்நிலைகளில் அவர்களுக்கு ஒரு நன்மையை அளிக்கிறார்கள். அவர்கள் தங்கள் இலக்குகளை அடைய அதிக தூரம் செல்வார்கள், பெரும்பாலும் ஏமாற்றும் தந்திரங்களை பயன்படுத்துவார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் ஆளுமையில் உள்ள இரட்டைத்தன்மையை நீங்கள் அறிந்திருக்கலாம், இது அவர்களை கணிக்க முடியாதவர்களாகவும், தந்திரமானவர்களாகவும் மாற்றுகிறது. அவர்கள் சிறந்த தொடர்பாளர்கள் மற்றும் அவர்கள் விரும்பியதைச் செய்ய மற்றவர்களை எளிதில் நம்ப வைக்க முடியும்.
மிதுன ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் அவர்கள் மற்றவகர்களின் எண்ண ஓட்டங்களை எளிதில் அறிந்து கொள்வார்கள். மற்றவர்கள் அவர்களின் பொய் அல்லது தந்திரத்தை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அவர்கள் மிகவும் வசீகரமானவர்கள் மற்றும் மக்களை எளிதில் தங்கள் பக்கம் ஈர்க்க முடியும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் அவர்களின் உணர்ச்சி நுண்ணறிவு மற்றும் மக்களின் உணர்ச்சிகளைப் படிக்கும் திறனுக்காக அறியப்படுகிறார்கள். அவர்கள் சக்திவாய்ந்த உள்ளுணர்வு கொண்டவர்கள் மற்றும் மற்றவர்கள் தவறவிடக்கூடிய நுட்பமான விஷயங்களை எளிதாக கண்டறிய முடியும்.
மீன ராசிக்காரர்கள் மிகவும் ஆக்கப்பூர்வமானவர்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு தனித்துவமான தீர்வுகளை கொண்டு வர முடியும். அவர்கள் தங்கள் குணத்தை எளிதில் மாற்றிக்கொள்ளக் கூடியவர்கள் மற்றும் வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தங்கள் நடத்தையை மாற்றிக் கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் வசீகரமாவார்கள் அழகான மற்றும் இராஜதந்திரமானவர்கள். அவர்கள் மக்களை வசதியாக உணர வைப்பதில் சிறந்தவர்கள் மற்றும் அவர்களின் வசீகரத்தால் மக்கள் மனதை எளிதில் வெல்ல முடியும். மக்களைப் படிப்பதில் துலாம் ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் அவர்களின் தேவைகளையும் விருப்பங்களையும் விரைவாக அறிந்து கொள்ள முடியும்.
வெவ்வேறு கண்ணோட்டங்களை சமநிலைப்படுத்துவதில் அவர்கள் சிறந்தவர்கள், இது அவர்களை சிறந்த பேச்சுவார்த்தையாளர்களாக ஆக்குகிறது. இருப்பினும், துலாம் சில நேரங்களில் தந்திரமானவர்களாக நடந்து கொள்ளலாம், குறிப்பாக அவர்கள் தாங்கள் நினைத்தது நடக்காதபோது அதனை நிறைவேற்ற மிகவும் தந்திரமானவர்களாக மாறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

