இந்த 4 ராசிக்காரங்க கொடூரமான வில்லன்களாக இருப்பார்களாம்... இரக்கம்னா என்னனே இவங்களுக்கு தெரியாதாம்...!

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்கள். ஒவ்வொரு ராசிக்கும் அதன் பலம் இருந்தாலும், சில அறிகுறிகள் அவர்களின் சுயநலத்திற்காகவோ அல்லது அவர்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகும் போதோ மிகவும் இரக்கமற்றவர்களாக மாறுவார்கள்.

அவர்கள் தங்கள் கடினமான வார்த்தைகளாலும் அல்லது தந்திரமான செயல்களாலும் சில ராசிக்காரர்களும் மிகவும் கொடூரமானவர்கள் என்று நற்பெயரை அவர்களின் நட்பு வட்டாரத்தில் கொண்டுள்ளனர். இவர்களுடன் வம்பு வைத்துக்கொள்வது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வது போன்றது.

Most Cruel Zodiac Signs in Tamil

தங்களுக்கு வேண்டியது கிடைப்பதற்காகவும், பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காகவும் அவர்கள் எந்த கொடூரமான செயலையும் செய்ய தயங்க மாட்டார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம்

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது விருச்சிகம். இந்த ராசிக்காரர்கள் அவர்களின் தீவிரதன்மைக்காக அறியப்படுகிறார்கள், மேலும் ஏமாற்றமடையும் போது, ​​அவர்கள் கோபப்படுவதில்லை, மாறாக அமைதி காக்கிறார்கள். அவர்களின் கொடூர குணமானது ஆழ்ந்த உணர்வு மற்றும் கட்டுப்பாட்டிற்கான விருப்பத்தின் இடத்திலிருந்து வருகிறது.

விருச்சிக ராசிக்காரர்கள் மன்னிப்பு என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் மற்றும் உளவியல்ரீதியாக ஒருவரை துன்புறுத்துவதில் வல்லவர்கள். நீங்கள் அவர்களுக்கு துரோகம் செய்தால், அவர்களின் பழிவாங்குதல் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கலாம். அவர்கள் எளிதில் மறக்கக்கூடியவர்கள் அல்ல, மேலும் பழிவாங்குவதற்கான அவர்களின் தேவை நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் வழிகளில் செயல்பட அவர்களைத் தூண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் வெளித்தோற்றத்திற்கு அமைதியானவர்களாகவும், ஒழுக்கமானவர்களாகவும் தோன்றலாம், ஆனால் அவர்களின் வெளித்தோற்றத்தைக் கண்டு ஏமாறாதீர்கள். மகர ராசிக்காரர்கள் தங்களுக்கு அநியாயம் நிகழ்த்தப்பட்டதாக உணர்ந்தால், அதிர்ச்சியூட்டும் வகையில் மிகவும் கூலாக இருப்பார்கள். அவர்களின் குரூர குணமானது உணர்ச்சிவசப்படாமல் திட்டமிட்டு பழிவாங்கும் திறனில் இருந்து வருகிறது.

தங்களின் நன்மைக்காக மற்றவர்களைத் தங்கள் வாழ்க்கையை விட்டு வெளியேற்றவும் அவர்களை பழிவாங்கவும் தயங்க மாட்டார்கள், மேலும் வணிக அல்லது தனிப்பட்ட விஷயங்கள் என்று வரும்போது அவர்கள் இரக்கமற்றவர்களாக இருக்கலாம். மகர ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள், ஆனால் அவர்களின் அணுகுமுறை மிகவும் வித்தியாசமானதாகவும், கடுமையானதாகவும் இருக்கும்.

கும்பம்

சாகச ஆன்மாக்களான கும்ப ராசிக்காரர்கள் இந்த பட்டியலில் இருப்பது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அவர்களின் கொடூர குணம் பற்றின்மையில் உள்ளது. விஷயங்கள் அவர்கள் எதிர்பார்த்தது போல எதுவும் நடக்காத போது, அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை முற்றிலுமாகத் துண்டிக்க முடியும், மற்றவர்களின் உணர்வுகல் அவர்களுக்கு பொருட்டே அல்ல.

இந்த உணர்ச்சித் தூரம் அவர்களை இதயமற்றவர்களாகக் காட்டலாம், குறிப்பாக அவர்கள் உணர்வுகளை விட லாஜிக்கைத் தேர்ந்தெடுக்கிறார்கள். கும்ப ராசிக்காரர்கள் நீங்கள் அவர்களின் நேரத்திற்கு தகுதியானவர் அல்ல என்று முடிவு செய்தால், அவர்கள் சற்றும் சிந்திக்காமல் உங்களை விரட்டியடிப்பார்கள். இந்த கூலான அலட்சியம் தான் அவர்களின் கொடூர குணமாகும்.

மேஷம்

இந்த பட்டியலில் ஆக்ரோஷமான மனநிலை கொண்ட மேஷ ராசிக்காரர்கள் இறுதி இடத்தில் உள்ளனர். மேஷ ராசிக்காரர்கள் தூண்டப்படும் போது வெடித்துச் சிதறுவார்கள் மற்றும் அவர்களின் கொடூர குணம் அவர்களின் மனக்கிளர்ச்சி இயல்பிலிருந்து வருகிறது. அவர்கள் பேசுவதற்கு முன்பு எப்போதும் சிந்திக்க மாட்டார்கள், எனவே அவர்களின் வார்த்தைகள் ஆழமாக காயப்படுத்தலாம்.

மேஷ ராசிக்காரர்கள் கோபமாக இருக்கும்போது, ​​அவர்கள் எதிரில் இருப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைப் பற்றி கவலைப்படாமல், நேராக அவர்களை துன்புறுத்தும் செயல்களைச் செய்கிறார்கள். இருப்பினும், அவர்களின் கொடூர குணமானது மற்றவர்களை விட குறுகிய காலமாக இருக்கும். அவைகள் மனநிலை மாறியவுடன் அவர்கள் சொன்ன அல்லது செய்த கடுமையான விஷயங்களை நினைத்து அவர்கள் வருந்துவார்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Desktop Bottom Promotion