சந்திரன் மகர ராசிக்கு செல்வதால் உருவாகும் யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தை தரப்போகுதாம்...!

கோள்களில் சூரியனைப் போலவே சந்திரனும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகங்களில் ஒன்றாகும். சந்திரன் மகிழ்ச்சி, அறிவு மற்றும் அமைதியின் அதிபதியாக இருக்கிறார். சந்திரன் தற்போது சனிபகவான் ஆளும் மகர ராசியில் நுழைகிறார்.

இந்த கிரகப்பெயர்ச்சி மூலம் சில ராசிகளுக்கு சனி தோஷம் நீங்கும். சந்திரனின் ஆசீர்வாதம் அவர்கள் மீது பொழிகிறது. இதன் மூலம் அவர்களுக்கு செல்வமும், அதிர்ஷ்டமும் பெருகும் வாய்ப்புகள் உள்ளது. இந்த அதிர்ஷ்டங்களை அடையப்போகும் ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Moon Transit in Capricorn Creates Sarvartha Siddhi Yoga Lucky For These Zodiac Signs

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இந்த சந்திர பெயர்ச்சியால் படிப்பில் சிறந்து விளங்கலாம். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். அவர்கள் பல துறைகளில் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்த முடியும். இது அவர்களின் புகழை அதிகரிக்கும். அவர்கள் பணியிடத்தில் நல்ல திறமையுடன் பணியாற்ற முடியும்.

வேலையில் இருப்பவர்களுக்கு புதிய அங்கீகாரங்கள் வந்து சேரும். வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். இந்த ராசிக்காரர்கள் விரும்பிய அனைத்தையும் மிக விரைவாக அடைய முடியும். கடன் தொல்லையிலிருந்து வெளிவருவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வீட்டில் மங்களகரமான தருணங்கள் அமையும்.

சிம்மம்

இந்த சந்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் மனநலம் வெகுவாக மேம்படும். வேலையையில் உங்களுக்கு பாராட்டுகள் குவியும். இது உங்கள் வேலையை விரைவாக முடிக்க உதவும். மேலும், இது நிதிரீதியாக நன்மைகளை பெற உதவுகிறது. வியாபாரம் செய்பவர்களுக்கு அதிர்ஷ்டமான காலம் வரவிருக்கிறது.

புதிய தொழில் தொடங்கு விரும்புவர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக அமையும். புகழ் பெற்றவர்களுடன் எதிர்பாராத சந்திப்புகள் அமைய வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும். மேலும், பணம் சம்பாதிக்க புதிய வழிகள் திறக்கப்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் நற்பலன்கள் காத்திருக்கின்றன. ஆன்மீக விஷயங்களில் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சிக்காக பயணங்கள் மேற்கொள்ளப்படும். பிடித்த ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் வாங்க வாய்ப்புகள் கிடைக்கும். அவர்கள் நீண்ட காலமாக முடிக்காமல் விட்ட காரியங்களை இப்போது முடிக்கலாம்.

கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் இருப்பவர்கள் பிரகாசிக்க முடியும். வியாபாரிகளுக்கு பெரிய லாபங்கள் கிடைக்கும் காலம் வரப்போகிறது. அறிவியல் தொடர்பான துறையில் பணிபுரிபவர்களுக்கு மிக நல்ல நாட்கள் காத்திருக்கின்றன.

மகரம்

மகர ராசிக்காரர்கள் அதிக பணம் செலவழிக்காமல் தாங்கள் விரும்பியதைப் பெறுவார்கள். அரசாங்கத்தால் ஏதேனும் காரியங்கள் தடைப்பட்டிருந்தால் இப்போது அது தடங்கல்கள் இல்லாமல் முடிவுக்கு வரும். வீட்டு வேலைகளை முடிக்க பணம் கைக்கு வரும். உறவினர்கள் மூலம் பண உதவி கிடைக்கும்.

இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். பணியிடத்தில் இருந்து வந்த எதிர்மறை சூழல் விலகி உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, November 8, 2024, 16:19 [IST]
Desktop Bottom Promotion