Latest Updates
-
தீபாவளியில் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வருமானம் இரட்டிப்பாகும்! உங்க ராசி இதுல இருக்கா? -
Diwali 2026 Horoscope: இந்த தீபாவளியில் ராஜயோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Hair Care: கருகருனு நீளமான முடி வேணுமா? அப்ப தயிரை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
பட்டுப்போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்ப இந்த லிப் மாஸ்க்கை தினமும் நைட் போடுங்க.. -
தீபாவளிக்கு பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வெண்டக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பச்சடி செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் 'வெங்காய தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
Dhanteras 2026: தந்தேராஸ் நாளில் குறைந்த பட்ஜெட்டில் மகாலட்சுமியின் அருளைப் பெற வாங்க வேண்டிய 5 பொருட்கள்! -
வாஸ்து படி உங்களோட தங்க நகைகளை வீட்டின் திசையில் மட்டும் வைக்காதீங்க - இல்லனா அவ்வளவுதான் -
தீபாவளிக்கு பின் வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியும்!
வசந்த பஞ்சமி நாளில் நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் செல்வமும்,புகழும் அதிகரிக்கப்போகிறதாம்!
ஜோதிட சாஸ்திரத்தின் படி சந்திரன் ஒரு சுப கிரகமாகும். உங்கள் ஜாதகத்தில் சந்திரன் நிலை உங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சந்திரன் ஒரு ராசியில் இரண்டரை நாட்கள் மட்டுமே தங்கியிருந்தாலும், இந்த இரண்டரை நாட்களுக்குள் உங்கள் வாழ்க்கை நிர்ணயிக்கும் சக்தி உண்டு. வசந்த பஞ்சமி என்ற மங்களகரமான நாளில், சந்திரன் கும்ப ராசியிலிருந்து விலகி, மீன ராசிக்குள் நுழைகிறது.
சந்திரனின் இந்த ராசி மாற்றம் ஜனவரி 23, 2026 அன்று காலை 8:34 மணிக்கு நிகழவுள்ளது. சந்திரனின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் மூன்று ராசிக்காரர்கள் இந்த மாற்றத்தால் அபரிமிதமான வளர்ச்சியை அடைவார்கள். மேலும் இந்த மாற்றத்தால் அவர்கள் சரஸ்வதி தேவியின் அருளைப் பெறுவார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
சந்திரன் உங்கள் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே வசந்த பஞ்சமி மற்றும் அதற்குப் பிந்தைய நாட்கள் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக அமையும். உங்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல பலன்களைக் காண்பீர்கள், சிலர் தங்களின் முயற்சியால் பதவி உயர்வுகளையும் பெறக்கூடும். சக ஊழியர்கள் உங்கள் வேலையைப் பாராட்டுவார்கள். சரஸ்வதி தேவி கல்வி மற்றும் கலைத்துறைகளில் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தருவார்.
இந்த காலகட்டத்தில் அவர்களின் முதலீடுகள் எதிர்பாராத லாபத்தைக் கொடுக்கும். அவர்களின் கடன் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். வேலையில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் தகுந்த அங்கீகாரத்தையும், பாராட்டையும் பெறலாம். அவர்களின் கனவு வாகனத்தை வாங்குபவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
விருச்சிகம்
சந்திரன் உங்கள் ஐந்தாம் வீட்டைக் கடந்து செல்லப்போகிறது, இது கல்வி மற்றும் காதலுக்கான வீடாகக் கருதப்படுகிறது. இந்த வீட்டில் சந்திரன் இருப்பது உங்களின் அறிவாற்றலை மேம்படுத்தும். சரஸ்வதி தேவியின் அருளால், இந்த காலகட்டத்தில் உங்களின் தடைபட்ட பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்படலாம், மேலும் இந்த ராசிக்காரர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம். பயணங்களும் அவர்களுக்கு லாபகரமான பலன்களை ஏற்படுத்தும். பணியிடத்தில் சூழ்நிலைகள் சாதகமாக இருப்பதால், நீங்கள் மகிழ்ச்சியாக வேலை செய்ய முடியும்.
அவர்கள் தங்கள் இலக்குகளை அடையும் முயற்சியில் இப்போது மிகவும் வேகமாக இருப்பார்கள். செல்வாக்கு மிக்கவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வது அவர்கள் வாழ்க்கையில் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருகிறது. அங்கீகாரமும், புகழும் தேடி வரப்போகிறது. சுக்கிரனின் பெயர்ச்சி உறவுகளில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் அவர்கள் வாழ்க்கையில் அமைதி மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும்.
தனுசு
சந்திரன் உங்கள் நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார், மேலும் இந்த வீட்டில் சந்திரன் அமர்வது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், சமநிலையையும் நீங்கள் அனுபவிக்கக்கூடும். உங்கள் தொழில் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். சரஸ்வதி தேவியின் அருளால், உங்கள் கவனமும், ஆற்றலும் மேம்படக்கூடும். படைப்பு மற்றும் கலைத் துறைகளில் பணிபுரிபவர்கள் சமூகத்தில் அங்கீகாரத்தைப் பெறுவார்கள்.
இந்த குறுகிய காலகட்டம் நிதி முதலீடுகளுக்கு, குறிப்பாக நீண்ட கால இலக்குகளுக்கு சாதகமானது, இந்த காலகட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள் லாபத்தைத் தரக்கூடும். சரியான அணுகுமுறையுடன், இந்த நேரத்தை நீங்கள் சிறப்பாகப் பயன்படுத்தி உங்கள் இலக்குகளை அடையலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

